மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவை நிறைவேற்றக் கோரி டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!
மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவை நிறைவேற்றக் கோரி டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!
புதுடெல்லி: மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவை உடனடியாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கோரி, மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புதுடெல்லியில் திங்கட்கிழமை போராட்டம் நடத்தினர். இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டம் ஏற்கனவே 1995ல் இயற்றப்பட்டு அமலில் இருக்கிறது.ஆனால் இந்த சட்டத்தை வலுப்படுத்த புதிய மசோதா ஒன்று கொண்டுவரப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கிறது.
இந்த நாடாளுமன்றத்தின் இறுதி அமர்வான இந்த அமர்வில் இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் ,இந்த மசோதா மீண்டும் உருவாக்கப்பட்டு கொண்டுவரப்படவேண்டும். இதனால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என்று போராட்டத் தலைவர்கள் கூறினர்.தற்போதைய நாடாளுமன்றத்தில், சுமார் 126 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.
கடந்த சில கூட்டத்தொடர்கள் அரசியல் குழப்பம் காரணமாக முழுமையாக நடக்காமல் இருந்த நிலையில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட முடியவில்லை. நாட்டில் சுமார் 40லிருந்து 90 மில்லியன் பேர் உடல் ஊனம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க இந்த சட்டம் அவசியம் என்று போராட்டத் தலைவர்கள் கூறுகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்து அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
புதுடெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.
- See more at: http://www.thoothuonline.com
மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவை நிறைவேற்றக் கோரி டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:37:00
Rating:
No comments: