இணையப் பணப்பரிமாற்றம்: கவனம் தேவை - ஜெ.ஜெயரஞ்சன்

இணையப் பணப்பரிமாற்றம்: கவனம் தேவை - ஜெ.ஜெயரஞ்சன்

இந்தியாவில் இணையம் வழியாக நடைபெறும் பணப்பரிமாற்றம் பெருகி வருகிறது. கைப்பேசி வழியாகவும் பணப்பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது. கைப்பேசி மற்றும் இணையம் போன்றவை பணப்பரிமாற்றத்தை எளிமையாக்குகின்றன. அதனாலேயே இம்முறை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.
ஆனால், இம்முறையில் பணத்தைத் திருடர்களிடம் இழப்பது பெருகி வருகிறது. உலக நாடுகளில் இணையப் பணத் திருட்டில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. அசோகாம் மற்றும் EY ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இத்தகைய திருட்டுகள் நடப்பது இந்த ஆண்டில் 67 விழுக்காடு உயரும் என்று கணித்துள்ளார்கள்.
இணையத்தைப் புதிதாக பயன்படுத்துவோரும், கிராமப்புறப் பயனாளர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வங்கிகளுக்கிடையே நடைபெறும் இணையப் பரிவர்த்தனையிலேயே பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் அமெரிக்கக் கணக்கிலிருந்து ஏறத்தாழ 1,100 கோடி ரூபாய் ஒரு நொடியில் திருடப்பட்டது. திருடியவர்களின் அதீதப் புத்திசாலித்தனம் அதைக் காட்டிக்கொடுத்தது. ஒன்றிய அரசு உடனே தலையிட்டதில் அப்பணம் மீட்கப்பட்டது.
சாமானியர்களின் பணம் அதேபோன்று மீட்கப்படுமா? எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இணையப் பரிவர்த்தனையில் ஈடுபடுவது நன்று.
இணையப் பணப்பரிமாற்றம்: கவனம் தேவை - ஜெ.ஜெயரஞ்சன் இணையப் பணப்பரிமாற்றம்: கவனம் தேவை - ஜெ.ஜெயரஞ்சன் Reviewed by நமதூர் செய்திகள் on 23:49:00 Rating: 5

No comments:

Powered by Blogger.