பாஜக-வுக்கு எதிரான போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பாஜக-வுக்கு எதிரான போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மேற்கு வங்கத்தில் பாஜக-வின் வளர்ச்சியைத் தடுக்க திரிணாமுல் காங்கிரஸுடன் இணைய விரும்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் கவுதம் தேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மே 8ஆம் தேதி திங்கட்கிழமை (நேற்று) செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், “பாஜக-வின் இனவாத அரசியலுக்கு எதிராகப் போராட மம்தா பானர்ஜி ஆர்வம்காட்டினால், அவர் எங்களுடன் பேசலாம். இதுபற்றி விவாதிக்க உள்ளோம். மேற்கு வங்கத்தில் பாஜக ஒரு தொகுதியைக்கூட பிடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
அதற்காக பாஜக-வுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயகச் சக்திகளை ஒன்றுதிரட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விரும்புகிறது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் முக்கியத் தேவையாக இருக்கிறது. இந்திய நாட்டுக்கும், மேற்கு வங்கத்துக்கும் முக்கியமான ஆபத்தாக பாஜக இருக்கிறது. அது மாதிரியான வலதுசாரிக் கட்சி, மாநிலத்தில் முக்கியத்துவம் பெற்றுவிட்டால், ஜனநாயகமும் சிறுபான்மையினர் உரிமையும் நிச்சயம் இருக்காது. பாஜக-வுக்கு எதிரான எங்களின் போராட்டத்துக்கு மம்தா பானர்ஜி தேவை” என்று தெரிவித்தார்.
பாஜக-வுக்கு எதிரான போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாஜக-வுக்கு எதிரான போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் Reviewed by நமதூர் செய்திகள் on 23:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.