மாடுகளுக்குக் சொகுசு குடியிருப்பு: மார்க்கண்டேய கட்ஜூ விமர்சனம்!

மாடுகளுக்குக் சொகுசு குடியிருப்பு:  மார்க்கண்டேய கட்ஜூ விமர்சனம்!

மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள உத்தரப்பிரதேச முதல்வரை, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கிண்டலாக விமர்சனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அவரின் உத்தரவுகள் பாராட்டுகளையும், ஒரு சில விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் மே மாதம் 1ஆம் தேதி திங்கட்கிழமை உத்தரப்பிரதேசத்தில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தன்னுடைய ஃபேஸ்புக்கில் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
‘உ.பி அரசுக்கு பைத்தியம் பிடித்துள்ளது. முறையான மருத்துவ வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், மாடுகளுக்காக ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியிருக்கிறது உ.பி அரசு. மாடுகளுக்கென்று மூன்று படுக்கை அறை கொண்ட சொகுசு குடியிருப்புப் பகுதிகள், பேறுகால விடுப்பு, குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி, சுற்றுலா வசதி போன்றவற்றையும் உ.பி அரசு செய்து கொடுக்கும் என நினைக்கிறேன்’ என்று கிண்டலடித்துள்ளார்.
மற்றொரு பதிவில், ‘The Planet of the Apes’ என்னும் ஆங்கிலத் திரைப்படம் போன்று இந்தியில் ‘The Planet of the Cows’ என்னும் திரைப்படத்தை எடுங்கள் என்றும் நகைச்சுவை ததும்ப பாஜக அரசை கிண்டலடித்துள்ளார்.
மாடுகளுக்குக் சொகுசு குடியிருப்பு: மார்க்கண்டேய கட்ஜூ விமர்சனம்! மாடுகளுக்குக் சொகுசு குடியிருப்பு: மார்க்கண்டேய கட்ஜூ விமர்சனம்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.