உலக அன்னையர் தினம்!

உலக அன்னையர் தினம்!

தாய்மையைப் போற்றும் விதமாக இன்று மே 14 உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. உண்மையில், தாய்மார்கள் கடவுளுடைய பூமியிலுள்ள ஏஞ்சல்கள். கலாசார, பண்பாடு வேறுபட்டிருந்தாலும், அம்மா என்ற பாசம் மட்டும் எங்குமே வேறுபட்டிருக்காது.
அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மரியா ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜர்விஸ், தனது அம்மாவின் உந்துதலின் பேரில் அமெரிக்காவில் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக ‘மதர்ஸ் டே ஒர்க் கிளப்’ என்ற அமைப்பை உருவாக்கி, மருத்துவர்களை வரவழைத்து, தாய்மார்களுக்குக் குழந்தை வளர்ப்பு, பேணிக்காத்தல், ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, எவ்வாறு கல்வி கற்பிப்பது போன்ற பயிற்சிகளை அளித்தார்.
இவரது தாயார் ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் போதித்து வருபவர். ஒருநாள், அன்னையைப் போற்றுவதற்கு ‘அன்னையர் தினம்' வரும் என்று பாடி இருந்தது அவரது காதுகளிலும், நினைவிலும் வந்தது.
கடந்த 1905ஆம் ஆண்டு ஜர்விஸ் தாயார் காலமானார். அவரது ஆசையை நிறைவேற்றும் நோக்கில், 25 ஆண்டுகள் அவரது அம்மா போதித்து வந்த ஆண்ட்ரூஸ் சர்ச்சுக்கு 1908, மே 10ஆம் தேதி, அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்குப் பூச்செண்டுகள் கொடுத்து அனுப்பினார். அன்றைய தினத்தை அன்னையர் தினமாகவே கொண்டாடினார்.
அன்னையர் தினத்தை அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து ஜர்விஸ் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் 28ஆவது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன், அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914, மே 9ஆம் தேதி கையெழுத்திட்டார். இதையடுத்து ஒவ்வோர் ஆண்டும் மே இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என அமெரிக்கா அரசு அறிவித்தது.
தாய் என்பவள் மிகப்பெரிய அதிகாரியாக இருந்தாலும், தனது தொழில் வாழ்க்கையை விட குழந்தைக்கே முக்கியத்துவம் கொடுப்பவளாக இருப்பாள். தாயானவள் குழந்தை தன் வயிற்றில் உருவாகும் காலம் தொடங்கி, அதை வளர்த்து பெரிய ஆளாக்கும் வரை பல கஷ்டங்களைச் சுகமாக ஏற்றுக்கொள்கிறாள். வயிற்றில் குழந்தை உதைப்பதை கூட சுகம் என்று கூறுபவள்தான் தாய். தான் குழந்தை அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை கோமாளியாக்கத் தயங்க மாட்டாள்.
அம்மா என்ற வார்த்தை மிகவும் மென்மையானது. அந்தக் குணத்தை கொண்ட தாயானவள், வேட்டையாடுபவளாக இருந்து தன் மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றி வளர்ப்பவளாகக் காணப்படுகிறாள். தான் பெற்ற மக்கள் தன்னை வெறுத்தாலும் பதிலாக அன்பை மட்டும் காட்டுகிற குணம் தாய்க்கு மட்டுமே உண்டு. ஓய்வு என்பது அவளுக்கு இல்லை. தாய் என்பவள் பெண்ணுக்குக் குழந்தை பருவத்திலிருந்து கல்லறை செல்லும் வரை முன்மாதிரியாகத் திகழ்கிறாள். ஆணுக்குப் பக்கபலமாக இருக்கிறாள். துவண்டுபோய் இருக்கிற வேளையில் ஓர் ஊன்றுகோலாக இருக்கிறாள். தன் குழந்தைக்காக எந்தவித சோதனையையும், கஷ்டத்தையும் தாங்க தயாராக இருக்கிறாள்.
இத்தகைய சிறப்புமிக்க அன்னையரை, இந்த அன்னையர் தினம், தனது தாய் மனதுக்கேற்ப நடந்து, தாயை மகிழ்விக்கக் கிடைத்த ஓர் அரிய நாளாக எண்ணிக் கொண்டாடுவோம்.
உலக அன்னையர் தினம்! உலக அன்னையர் தினம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.