விலையில்லாமல் வாடும் மிளகாய் விவசாயிகள்!

விலையில்லாமல் வாடும் மிளகாய் விவசாயிகள்!

நாட்டின் மிகப்பெரிய மிளகாய் சந்தையாக உள்ள குண்டூரில் அதிக விளைச்சல் மற்றும் விலைச் சரிவு காரணமாக விற்பனையாகாமல் சந்தை மூடிக்கிடக்கின்றது. சந்தைக்கு வந்த சுமார் 3 லட்சம் மிளகாய் மூட்டைகள் விற்பனைக்காகக் காத்துக்கிடக்கின்றன.
முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ஒரு குவிண்டால் ரூ.12,000 முதல் ரூ.14,000 வரையில் விற்பனையான நிலையில், இவ்வாண்டில் ரூ.5,000 ஆக விலை குறைந்துள்ளது. எனினும், விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஆந்திர மாநில அரசானது சந்தை விலையுடன் சேர்த்து ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.1,500 வழங்குகிறது. இத்திட்டம் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிளகாய் விவசாயிகள் அதிகளவிலான மிளகாய் மூட்டைகளை குண்டூர் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளனர்.
சந்தை சேமிப்புக் கிடங்குகளில் மிளகாய் மூட்டைகளை வைப்பதற்கு இடமில்லாத அளவுக்கு அதிக வரத்து காணப்படுகிறது. எனவே மிளகாய் விவசாயிகளுக்கு உரியத் தீர்வு கோரி, மே 1 மற்றும் மே 2 ஆகிய இரண்டு தினங்களில் சந்தைப் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதிக விளைச்சல், அதிக வரத்து மற்றும் போதிய விலையின்மை ஆகிய காரணங்களால் மிளகாய் விவசாயிகள் உற்பத்திச் செலவைக்கூட ஈட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
விலையில்லாமல் வாடும் மிளகாய் விவசாயிகள்! விலையில்லாமல் வாடும் மிளகாய் விவசாயிகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.