தொடரும் சில்லரைப் பணவீக்க சரிவு !

தொடரும் சில்லரைப் பணவீக்க சரிவு !

சில்லரைப் பண வீக்கம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த மூன்று மாதத்தில் சில்லரைப் பண வீக்கம் 3 சதவிகிதத்துக்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்கான சில்லரைப் பண வீக்கம் 2.99 சதவிகிதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இது 5.47 சதவிகிதமாக இருந்தது.
அத்தியாவசிய உணவுப்பொருள்களான பருப்பு மற்றும் காய்கறிகள் விலை சரிவே சில்லரைப் பண வீக்கத்திற்கு காரணமாக உள்ளது.பருப்பு விலை 15.94 சதவிகிதமும் , காய்கறிகள் விலை 8.59 சதவிகிதமும் சரிவை சந்தித்துள்ளது. அதே சமயத்தில் பழங்கள் விலை 3.78 சதவிகிதம் உயர்ந்துள்ளது. எரிபொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏப்ரல் மாதத்துக்கான மொத்த விலைப் பண வீக்கம் 3.85 சதவிகிதமாக சரிந்துள்ளது. பண வீக்கம் தொடர்ந்து சரிந்து வருவதால் ரிசர்வ் வங்கி தனது அடுத்த நிதிக்கொள்கை அறிக்கையில் வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் சில்லரைப் பணவீக்க சரிவு ! தொடரும் சில்லரைப் பணவீக்க சரிவு ! Reviewed by நமதூர் செய்திகள் on 00:19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.