அம்முவின் அன்பு (ஒரு நிமிடக்கதை) - உமர் முக்தார்


பரபரப்பான காலை நேரம் ரஞ்சினி வேலைக்கு தயாராகி கொண்டிருக்கிறாள். நேரம் ஆகிவிட்டது. காலை உணவு துரிதமாக முடித்தாகிவிட்டது. குழந்தை அம்மு சீக்கிரம் விழித்துவிட்டால். பள்ளி விடுமுறை வேறு. ரஞ்சினி தயாராகிவிட்டால் வேலைக்கு கிளம்ப. ஆனால் அவள் எப்போதும் எடுத்து செல்லும்  கோப்பு காணவில்லை.
"அய்யோ எங்கே வைத்தேன்" புலம்பியபடியே தேடுகிறாள். எங்கு தேடியும் கிட்டவில்லை அது. 
"அம்மு, நான் ஆபிசுக்கு எடுத்துச்செல்லும் பையை பார்த்தியா"
"இதுவாமா அது"
அதில்தான் இவ்வளவு நேரம் எதையோ எழுதிக்கொண்டிருந்தாள் அம்மு. அதைப்பார்த்ததும் ரஞ்சினிக்கு கோபம் தலைக்கேறியது.
"அத யாரடி உன்ன எடுக்க சொன்னா, என்னத்த கிறுக்கி வைச்சிருக்க"
சரமாரியாக விழுந்தது அடி
"என்னாச்சோ" புலம்பியபடி தனது அலுவலக கோப்பை திறந்து பார்க்கிறாள்.
அதில் இப்படி எழுதியிருந்தது "ஐ லவ் அம்மா" என்று.
ரஞ்சினியின் கோபப்பார்வை, அம்முவின் அன்பை நினைத்து கண்ணீர் வடித்தது. தனது தவறை உணர்ந்து அழுதுகொண்டிருந்த அம்முவை தூக்கி கட்டியணைத்துக்கொண்டவளாக "சாரிடா அம்மு" என்று மன்னிப்பு கேட்டாள் ரஞ்சினி.

- உமர் முக்தார்
அம்முவின் அன்பு (ஒரு நிமிடக்கதை) - உமர் முக்தார் அம்முவின் அன்பு (ஒரு நிமிடக்கதை) - உமர் முக்தார் Reviewed by நமதூர் செய்திகள் on 04:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.