வி.களத்தூரில் ஆதார் புகைப்படம் எடுக்கும் மையம் அமைக்கப்படுமா?

நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு முடிவு செய்து அறிவித்தது. இதன் மூலம் நேரடியாக மக்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும், தகுதி இல்லாதவருக்கு மானியம் தடுப்பது என்ற நோக்கத்துடன் கொண்டுவந்ததாக அறிவித்தது. 


இப்போது ஆட்சி மாறிவிட்டது. காங்கிரஸ் அரசு கொண்டுவந்தபோது எதிர்த்த பாஜக தற்போது இந்த திட்டத்தை தீவிரபடுத்தி வருகிறது. சமையல் காஸ் பெற, பல்வேறு அரசு நல திட்டங்கள் பெற, லைசென்ஸ் எடுக்க, பாஸ்போர்ட் எடுக்க, பேங்க் கணக்கு துவங்க கூட ஆதார் அட்டை இருக்கிறதா என்று தான் முதலில் கேட்கிறார்கள். அந்த அளவிற்கு ஆதார் அட்டை  அவசியமாக்கப்பட்டுள்ளது. 

ஆனால் பொதுமக்கள் பலரிடம் ஆதார் அட்டை இல்லாமல் அவதியிருகின்றனர். உதாரணத்திற்கு : வி.களத்தூரில் கடந்த 2 ஆண்டுகளாக பல முகாம்கள் இதற்காக போடப்பட்டன. பொதுமக்களும் ஆர்வமாக புகைப்படம் எடுத்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படவில்லை. 

தற்போது வேப்பந்தட்டையில் நிரந்தர முகாம் அமைத்துள்ளார்கள். அங்கேயாவது புகைப்படம் எடுத்தால் நமக்கு ஆதார் கார்டு கிடைக்கும் என்று சென்றால். அங்கே பெரும் கூட்டமாக இருக்கிறது. காரணம் ஒருவர்தான் புகைப்படம் எடுக்கும் பணியில் அமர்ந்துள்ளார். வேப்பந்தட்டையில் உள்ள அனைத்து ஊராட்சிக்கும் அங்கேதான் புகைப்படம் எடுக்கப்படுகிறது. அவர்களில் பலரை இப்போ வாருங்கள், அப்போ வாருங்கள் என்று ஏதாவது காரணங்களை சொல்லி அலைக்களிக்கிறார்கள். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்படுகின்றனர்.

ஆகையால் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள வி.களத்தூர் உள்பட அனைத்து ஊராட்சிகளிலும் மீண்டும் புகைப்படம் எடுக்கும் மையம் அமைக்க வேண்டும். குறைந்தது ஏற்கனவே புகைப்படம் எடுத்தவர்களுக்காவது உடனடியாக  ஆதார் அட்டை வழங்கப்படவேண்டும். இதன்மூலம் பொதுமக்களின் சிரத்தையும், அலைச்சலையும் ஓரளவு குறைக்கலாம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- வி.களத்தூர் பாரூக்
வி.களத்தூரில் ஆதார் புகைப்படம் எடுக்கும் மையம் அமைக்கப்படுமா? வி.களத்தூரில் ஆதார் புகைப்படம் எடுக்கும் மையம் அமைக்கப்படுமா? Reviewed by நமதூர் செய்திகள் on 06:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.