மிரட்டல் வதந்திகளின் பின்னணியில் சங்க்பரிவாரம்!

புதுடெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் மிரட்டல் வதந்திகளின்
பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.முஸ்லிம் அமைப்புகள், அரபி பெயர் கொண்ட நபர்களின் பெயரில் வெளியாகும் மிரட்டல் வதந்திகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் நாடகம் என்று, ‘இந்தியா ரெஸிஸ்ட்’ என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் அண்மைக்காலமாக ஏராளமான மிரட்டல் செய்திகள் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் முஸ்லிம் இளைஞர்களின் பெயரில் வந்துகொண்டிருக்கின்றன.இந்த மிரட்டல் செய்திகளுக்கும், முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று பின்னர் போலீஸ் விசாரணையில் நிரூபணமாகியுள்ளது.
அரபு, உர்து பெயரிலான அமைப்புகளே பெரும்பாலான மிரட்டல் வதந்திகளின் பின்னணியில் உள்ளன.ஜமாஅத், முஜாஹித், ஜிஹாத், அல் இஸ்லாம் என்ற வார்த்தைகளை இணைத்து தேசிய மற்றும் சர்வதேச முஸ்லிம் அமைப்புகளை தேவைக்கு ஏற்றவாறு சங்க்பரிவார்களைச் சார்ந்தவர்கள் உருவாக்குகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் ’ஜமாஅத் அல் முஜாஹிதீன் பங்களாதேஷ்’ என்ற அமைப்பின் பெயரில் கொல்கத்தாவில் வெடிக்குண்டு மிரட்டலுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.ஆனால், அந்த அமைப்பின் ஸ்தாபக தலைவர் அமய் சங்கர் என்ற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.டிசம்பர் மாதம் முஸஃபர் நகரில் உள்ள கோயில்களில் பசுமாமிசங்களை வீசிய தேஜ்ராஜ் சிங் என்ற விசுவ இந்து பரிஷத் இந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சார்ந்த நபரை போலீசார் கைதுச் செய்திருந்தனர்.மஸ்ஜிதுகளில் பன்றியின் மாமிசத்தை வீசுவதும், கோயில்களில் பசு மாமிசத்தை வீசிவிட்டு, கோயில்களின் சுவர்களில் இஸ்லாமிக் ஸ்டேட்டின் பெயரில் வகுப்பு துவேசத்தை உருவாக்கும் முழக்கங்களை எழுதுவதும் இவரது வேலையாகும்.ஆனால், தேஜ்ராஜ் சிங் கைதுச் செய்யப்பட்டபோது அவருக்கு மனநோய் என்று குடும்பத்தினர் தெரிவித்தபோது போலீஸ் அவர்களின் கதையை நம்பிவிட்டது.
கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தின் 16 அமைச்சர்களுக்கு, ‘இந்திய முஜாஹிதீன்’ என்ற அமைப்பின் பெயரால் மிரட்டல் செய்தி வந்தது.’ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர் தாக்குதல்களை நடத்துவோம்’ என்பதே அந்த மிரட்டல் செய்தி.தேசிய ஊடகங்களுக்கும் இந்த மிரட்டல் செய்திக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டிருந்தன.ராஜஸ்தான் போலீஸ், ‘இந்தியன் முஜாஹிதீன்’ மீது முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) பதிவுச் செய்து விசாரணையை துவக்கினர்.ஆனால், சுசில் சவுதரி என்ற சங்க்பரிவார அமைப்பின் உறுப்பினர்தாம் இந்த மிரட்டல் செய்தியை அனுப்பியவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பிற்கான பொறுப்பை ஏற்று அப்துல் கான் என்ற பெயரில் டிவிட்டரில் செய்தியை வெளியிட்டவர் எஞ்சீனியரிங் பயிலும் இந்து மாணவர் என்பதை போலீஸ் கண்டுபிடித்தனர்.ஆனால், அவர், மன நோயாளி என்று போலீசும், குடும்பத்தினரும் சித்தரித்தனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை உருவாக்குவது, முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை சமூகத்தில் தோற்றுவிப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இத்தகைய மிரட்டல் வதந்தி செய்திகளை சங்க்பரிவார அமைப்பினர் வெளியிட்டு வருகின்றனர்.இம்மாதிரியான சம்பவங்களில் தொடர்புடைய நான்கு பேர் மீது சாதாரணமான வழக்குகளை பதிவுச் செய்த போலீசார், பின்னர் அவர்களை உடனே விடுவித்துள்ளனர்.மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் குறித்த போலீஸின் கருத்தாகும்.அதேவேளையில், நிரூபிக்கப்படாத இத்தகைய மிரட்டல் வதந்தி செய்திகளின் பெயரால் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வழக்குகளில்
முஸ்லிம் இளைஞர்களுக்கு தீவிரவாதத்துடன் ஏதேனும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் பாதுகாப்பு ஏஜன்சிகளுக்கு கிடைக்கவில்லை.
- See more at: http://www.thoothuonline.com/archives/70731#sthash.9Tha4QPV.dpuf
மிரட்டல் வதந்திகளின் பின்னணியில் சங்க்பரிவாரம்! மிரட்டல் வதந்திகளின் பின்னணியில் சங்க்பரிவாரம்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.