மீத்தேன் எடுக்கும் திட்டம் வளர்ச்சி திட்டமா?


தமிழகத்தின் காவேரி டெல்டா மாவட்டங்களில் 
மீத்தேன் எரிவாயு திட்டம் மூலம் 
அந்த பகுதி பாலைவனமாக்கும் முயற்சி நடைபெறுகிறது.

விவசாயத்தை நம்பி அந்த பகுதிகளில்  சுமார் 50,00,000 லச்சம் விவசாயிகள் வாழ்கிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் நிலத்துக்கு அடியில் 
இருக்கும் பாறைகளில் துளையிட்டு வெடிக்கச் செய்து 
மூலம் மீத்தேன்  எரிவாயு 35 ஆண்டுகளுக்கு எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

பிறகு நிலக்கரி எடுக்க முடிவு செய்துள்ளார்கள். இதெல்லாம் விவசாயிகளை பாதிக்ககூடிய மிகப்பெரிய பிரச்சனையாகும்.
இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிற்சாலைகளும், மாற்று எரிபொருள் சக்தியும் கண்டிப்பாக தேவைதான். ஆனால் அதைவிட மிக முக்கியமானது மக்களின் வாழ்வாதாரம். 

மக்களின் முன்னேற்றம் தான் ஒரு நாட்டின் வளர்ச்சி ஆகும். தனது நாட்டு மக்களை அழித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து கொண்டுவரப்படும் எந்த திட்டமும் ஒரு நாட்டுக்கு வளர்ச்சி தராது.

1991 முதல் நமது புதிய பொருளாதார கொள்கையால் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஒரு மாயை ஏற்பட்டுள்ளது. பெரிய கட்டிடங்களும், சாலைகளும், ஒவ்வொரு கையிலும் கம்ப்யூட்டர், செல்போன் என இருப்பது நாட்டின் வளர்ச்சியாக காட்டப்படுகிறது.

ஆனால் எந்த கொள்கையால் நமது நாடு வளர்ச்சி பெறும் என்று கொண்டுவந்தார்களோ. அந்த கொள்கையால்தான் 1991 முதல் 3,00,000 மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். அவர்களால் 50,000 கடனைக்கூட கட்ட இயலவில்லை.

இந்த நாட்டின் வளர்ச்சி என்பது வெறும் 3000 கோடீஸ்வரர்களிடம் சிக்கியுள்ளது. அவர்கள்தான் இங்கே வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரால் கொள்ளையடிக்கிறார்கள். மனித வளங்களை சுரண்டுகிறார்கள். 

கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், மீத்தேன், கெயில் குழாய் பதிப்பது, நியுட்றியன், காயல்பட்டணம் DCW, ஸ்டெர்லைட் என தொடர்ந்து தமிழகத்தில் அழிவு திட்டங்களே வந்துகொண்டு இருக்கின்றன. இந்த திட்டங்கள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள மக்கள் எதிர்த்ததால் தமிழகத்திற்கு வந்துள்ளது.

இதை எதிர்த்து தமிழர்களாகிய நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
இருக்கும் அழிவு திட்டங்களை இழுத்து மூட வைப்பது,
புதியதாக வரும் அழிவு திட்டங்களை அனுமதிக்க கூடாது என்பதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்.

- வி.களத்தூர் பாரூக் 

மீத்தேன் எடுக்கும் திட்டம் வளர்ச்சி திட்டமா? மீத்தேன் எடுக்கும் திட்டம் வளர்ச்சி திட்டமா? Reviewed by நமதூர் செய்திகள் on 00:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.