யார் இந்த பி எஸ் அப்துல் ரகுமான் அறிந்து கொள்வேமா ...

பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் மரணிக்க கூடியவர்களே., ஆனால் வாழ்ந்த இந்த நாட்களில் நாம் என்ன செய்தோம் நாம் எதை விட்டு சென்றோம். எதனை சம்பாதித்து வைத்துள்ளோம் என்பதே கேள்வி..

காசு பணம் இருந்தால் தனக்கு மட்டுமே அனைத்தையும் செலவு செய்துக் கொள்ளும் மனிதர்கள் மத்தியில் வாரி இறைக்கும் வள்ளலாக வாழ்ந்தவர் தான் இந்த பி.எஸ். அப்துல் ரகுமான்

யார் இந்த பி எஸ் அப்துல் ரகுமான்

பிரபல கல்வியாளரும், தொழிலதிபருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் இன்று மாலை சென்னையில் காலமானார்.


கல்வியாளராக, தொழிலதிபராக, பல்வேறு சேவை நிறுவனங்களை நடத்தி வந்தவருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான், சென்னையில் உள்ள பிரபல கிரசென்ட் பொறியியல் கல்லூரியை நிறுவியவர் ஆவார். தற்போது இது பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் பொறியியல் கல்வியில் புதிய புரட்சியை ஏற்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1928ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் பிறந்தவரான அப்துர் ரஹ்மான், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பொறியியல் கல்லூரிகள், பிற கல்லூரிகள், பள்ளிகளை நிறுவிய கல்வித்துறையில் பெரும் சேவை புரிந்தவர். அதேபோல மருத்துவமனைகள் பலவற்றையும் இவர் நிறுவியுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் துபாயிலும் தனது தொழில் பங்களிப்பை அளித்தவர் அப்துர் ரஹ்மான். துபாயின் மிகப் பிரபலமான ஈடிஏ குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர். அந்த குழுமத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். தனது சீதக்காதி டிரஸ்ட் மற்றும் ஜக்காத் நிதி கழகம் மூலமாக பல்வேறு தான தர்மங்களிலும் ஈடுபட்டு வந்தார் பி.எஸ். அப்துர் ரஹ்மான்.

அணைத்து கட்சி களையும் ( பி ஜே பி தவிர ) வளர்த்தவர்கள் வளர்த்தி கொண்டு இருப்பவர்கள் இஸ்லாமிய சமுகத்தை சார்ந்தவர்கள் என்பது உண்மையே

பொதுவான விஷயங்கள்:-

1.ராஜிவ்காந்தி அவர்களை கீழக்கரைக்கு அழைத்து வந்தவர்
2.எம்.ஜி.ஆர் யின் நெருங்கிய நண்பர்.
3.மேர நாம் அப்துல் ரஹ்மான் என்ற பழமை பாட்டின் உருவம் இவர்தான்
4.இந்திய இஸ்லாமிக் சென்டரிக்கு மிக பெரிய நன்கெடை வழங்கியவர்
5.திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க வில்இருந்து விலகி இவர் வீட்டிற்கு சென்று புது கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று கூறினார் .அப்போது பி.ஸ்.ஏ அவர்களின் மனைவி வெத்தலை கொட்டை பாக்கு கொண்டு வந்து வாழ்த்தினார்கள். அப்போது இரு வெத்தலை ஓன்றோடு ஓன்று ஒட்டி இருந்தது அதில் உதித்ததுதான் இரட்டைஇலை சின்னம்.
6.எம்.ஜி.ஆர் தொப்பி இவர் குடும்பம் போட்டது அதன்பின் அவர் தொப்பி இல்லாமல் காட்சி தருவது அபூர்வம்.
7.உலக டாப் 500 இஸ்லாமிய முக்கிய பிரமுகர்களிள் இவரும் ஒருவர்.இதை போன்று இன்னும் பல

மறைந்த அப்துர் ரஹ்மானின் உடல் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை பிற்பகல் 12.30 மணியிலிருந்து 1 மணிக்குள் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கடைநிலை ஊழியரையும் பெயர் சொல்லி அழைக்கும் நினைவாற்றலுக்குரியவர்.அவரது முயற்சியால் பல்வேறு கல்வித்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஏழை,எளிய மாணவர்கள் இலகுவாக கல்வி கற்று உயர்படிப்பு முடித்ததும் அவர்களுக்கு தமது தொழில் நிறுவனங்களில் உடனடி வேலை வாய்ப்பும் வழங்கிய பண்பாளர்.

பி.எஸ்.ஏ என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களால் அன்புடன் அழைக்கப்பெற்ற இந்த மாமனிதர் மனதில் நிழலாடும் பண்பாளர் என்பது சிறப்புக்குரிய விசயமாகும்.

அன்னாரின் இழப்பு ஒரு சமுதாயத்துக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கும், ஈ.டி.ஏ, கிரஸண்ட் குழுமத்தினருக்கும் ஸப்ரன் ஜமீல் என்னும் அழகிய பொறுமையை கொடுக்க துவா செய்வோம்...
யார் இந்த பி எஸ் அப்துல் ரகுமான் அறிந்து கொள்வேமா ... யார் இந்த பி எஸ் அப்துல் ரகுமான் அறிந்து கொள்வேமா ... Reviewed by நமதூர் செய்திகள் on 20:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.