"ஆவணப்படுகொலைகள்" அதிகரித்து வருவது எதை உணர்த்துகிறது? - நமதூரார் பதில்கள்
"ஆவணப்படுகொலைகள்" அதிகரித்து வருவது எதை உணர்த்துகிறது?
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அறுபதிற்கும் மேற்பட்ட ஆவணப்படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த படுகொலைகளை அரங்கேற்றியவர்கள் மீது இதுவரை சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசுதான் இதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.
ஆனால் அதிமுக அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறது. தமிழக அமைச்சரும் "ஆவணப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை" என்று அபாண்டமாக பொய் சொல்கிறார். அரசு எதை செய்தாலும் எதிர்க்கும் "எல்லா எதிர்க்கட்சிகளும்" வாக்குகளுக்காக இந்த காட்டுமிராண்டி செயலை கண்டிக்க மறுக்கின்றன. இங்கு "எல்லாமே" தங்களுக்கு சாதகமாக இருப்பதால் ஆதிக்க சக்திகள் தனது காட்டுமிராண்டி செயலை துணிச்சலாக தொடர்ந்து வருகின்றன

சாதி ஆதிக்கத்தை தீவிரமாக எதிர்த்த தமிழக மண்ணில் இன்று சாதி ஆதிக்கம் பெருக என்ன காரணம்?
அரசியல் கட்சிகள் முதற்காரணம். அவர்கள் வாக்குக்காக சமரசம் செய்துகொண்டார்கள். மற்றொன்று சமூக அமைப்புகள். இதில் சமூக அமைப்புகள்தாம் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க முடியும். ஆனால் அதைபோல் இங்கு நடைபெறுவதில்லை. ஒரு சிலர் மட்டும் "கடமைக்கு" என்பதாக செயல்படுகிறார்கள். அல்லது ஆதிக்க சாதிகள் முன்பு அடங்கி போய்விடுகிறார்கள். பல்வேறு பிரச்சனைகளில் காட்டும் முனைப்பு, தீவிரம் சாதி சாக்கடையை எதிர்ப்பதில் காட்டுவதில்லை. இந்த சந்தர்ப்பத்தை நன்கு உணர்ந்த ஆதிக்க சாதியினர் தங்களை இன்னும் வலுவாக கட்டமைத்துக் கொள்கிறார்கள்.
தேமுதிக தனித்து போட்டி அறிவிப்பு?
தேமுதிக கண்டிப்பாக தனித்து போட்டியிடாது. பாஜக அல்லது மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்துதான் போட்டியிடும். அதற்கான வாய்ப்புதான் அதிகம் இருக்கின்றன.
ஜெயலலிதாவை சந்தித்து முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்களே?
அந்த கோரிக்கை ஏற்கனவே 2011 தேர்தலில் ஜெயலலிதாவிடம் வை த்ததுதான். அவரும் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கை நிறைவேறும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் நிறைவேற்றவில்லை. முஸ்லிம் சமூகத்தின் மீது உண்மையான பற்று இருந்தால் கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்ததை ஏன் நிறைவேற்றவில்லை என்று ஜெயலலிதாவிடம் கேட்டிருக்க வேண்டும். மாறாக அப்போது வைத்த அதே கோரிக்கையை மீண்டும் வைத்துவிட்டு வருவது முஸ்லிம்களை ஏமாற்றும் வேலை.
திமுக-அதிமுக இதில் ஏதாவது ஒன்று இந்த முறை வீழுமா?
கண்டிப்பாக வீழாது. அப்படி சொல்லிவந்தவர்களே வீழ்ந்தார்கள். அந்த கட்சிகள் வீழ்வதுபோல் தோன்றி பிறகு எழுந்துவிடுகின்றன.
- நமதூரார்.
"ஆவணப்படுகொலைகள்" அதிகரித்து வருவது எதை உணர்த்துகிறது? - நமதூரார் பதில்கள்
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:47:00
Rating:
No comments: