சாதி வெறியர்கள் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த வரலாறு!
தமிழகத்தின் அரசியல் – சாதிவெறி குறித்து பேசிய பொழுது மூத்த தமிழ்த்தேசிய தோழர். அரங்க குணசேகரன்அவர்கள் சொன்னதில் ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன்.
“வட தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த சாதிய ஒடுக்குமுறை, உழைப்புச் சுரண்டல், கந்துவட்டிகள், தீரா வறுமை என நிகழ்ந்து வந்த கொடுமைகளைக்கு எதிராக 70, 80களில் வீருகொண்டு எழுந்த இளைஞர்கள் புரட்சிகரமான நடவெடிக்கைகளில் இறங்கி இவற்றினை எதிர்த்துப் போராடினார்கள். இந்த வரிசையில் உருவான தோழர்.தமிழரசன் சாதி ஒழித்த தமிழ்த்தேசிய விடுதலை எனும் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தினை துவக்கியிருந்தார்.
இந்த எழுச்சி விரைந்து பரவுவதை தடுக்க தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என ஒன்றுபட்டு நின்றிருந்த ஏழை உழைப்பாளிகளை துண்டாடினார்கள். இதற்கு சாதிவெறி பயன்பட்டது. 80களில் அரசினாலும், அதிகாரவர்க்கத்தினாலும் முற்போக்க்கு அரசியல் பேசிய இளைஞர்கள் ஒடுக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். சாதிபாகுபாடு இல்லாமல் இவர்கள் ஒன்றிணைந்து ஒடுக்குமுறைகளை எதிர்த்தார்கள். இதில் களப்பலியான கம்யூனிஸ்ட் போராளிகளுக்கு நத்தம்-நாயக்கன் கொட்டையில் நினைவுச்சின்னம் வைக்கபப்ட்டது வரலாறு.
இந்த முற்போக்கு அணியில் அனைத்து சாதி இளைஞர்களும், (*தற்போது ‘வந்தேறி’ என போலி தமிழ்த்தேசியவாதிகளால் சொல்லப்படும் இளைஞர்களும்) இணைந்து அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தினை நடத்தினார்கள். காவேரியில் நீர்விட மறுத்த கர்நாடகத்திற்கு மின்சாரம் தரக்கூடாது எனப் போராட்டம் ந்டத்திய பொழுது , (’வந்தேறி’ என கொச்சைபப்டுத்தப்படும் சமூகத்தினை சேர்ந்த) தமிழ்த்தேசிய தோழர் நெய்வேலியில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சார டவர்களை குண்டு வைத்து தகர்த்தார். இப்படியாக சிதம்பரத்திலிருந்து , தர்மபுரி வரை விரிந்து நின்ற முற்போக்கு கம்யூனிச இளைஞர் எழுச்சியை அரசு கடுமையாக முடக்கியது. குறிப்பாக எம்.ஜி.ஆர் காலத்தில் அரசு இதை மிகக்கொடூரமாக செய்தது.
இந்த தோழர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். சிலர் கொலைசெய்யப்பட்டார்கள், நீண்டநாள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். (^^இத்தோழர்களது வழக்குகள் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் மீதான வழக்குகளுக்கு போதிய நிதி இல்லாமல் போராடும் நிலையிலேயே இத்தோழர்கள் இருப்பதை பார்க்கிறோம்^^)
இந்த முற்போக்கு அரசியல் வளரவிடாமல் தடுக்க சாதியக் குழுக்களை உருவாக்கி, சாதி மோதல்களை திட்டமிட்டு வளர்த்தெடுத்து ஏழை எளிய மக்கள் ஒன்றுபட்டுவிடாமல் தடுத்தது அரசு.. மக்கள் ஒற்றுமை சிதரடிக்கப்பட்டது.
இவ்வாறாகவே தமிழ்த்தேசிய போராட்டம், முற்போக்கு அரசியல் பின்னுக்கு தள்ளப்படும் பணியை அரசு செய்தது.,, இந்த அரசியல் இன்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் விரிவுபடுத்தப்படுகிறது… இதை எதிர்த்து போராடாமல் தமிழ்த்தேசிய போராட்டம் வீரியம் பெறாது..: ” என்று பதிவு செய்தார்.
சாதிவெறி அரசிற்கு லாபம் தரக்கூடியது. வெள்ளையனைப் போல மக்களை பிரித்து ஆள்வதற்கு சாதிவெறி உதவுகிறது.
இதனாலேயே சாதிவெறியன்களுக்கு எதிராக அரசு கடுமையாக நடவெடிக்கை எடுப்பதில்லை. யுவராஜ் போன்ற பொறுக்கிகளை எவ்வளவு மெத்தனமாக கையாண்டது எனப்தையும், திலீபன் போன்றவர்களை கொடியை எரித்தான் என்பதற்காக சித்திரவதை செய்ததையும் நாம் பார்க்கவே செய்கிறோம்.
முல்லைப்பெரியாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைகால்களை உடை என்று காவல்துறை அதிகாரிகளே பேசியதை வீடியோவாக நாம் பார்த்தோம். ஆனால் பரமகுடியில் எந்த எதிர்ப்பும் செய்யாத ஒடுக்கப்பட்ட மக்களை குருவிபோல சுட்டுக் கொலை செய்தார்கள்.
இந்துத்துவ கொலைகாரர்கள், வன்முறையாளர்கள் இயல்பாக சாதிவெறியன்களுக்கு ஆதரவளிப்பதையும், சாதிவெறியர்கள் இயல்பாகவே இந்துத்துவ அரசியலை முன்னெடுப்பதையும் வெளிப்படையாகவே பார்க்க இயலுகிறது.
மக்களிடத்தில் நீண்டகாலமாக விதைக்கப்பட்டிருக்கும் விசச்செடியான ‘சாதிவெறியை’ மரமாக மாற்றும் முயற்சியை செய்பவர்களை அம்பலப்படுத்துவதும், தனிமைப்படுத்துவதும் மிக முக்கியம்…
- திருமுருகன் காந்தி
சாதி வெறியர்கள் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த வரலாறு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:05:00
Rating:
No comments: