உம்மன் சாண்டி என பெயர் சொல்லி அழைத்த சிறுமி..
பள்ளி விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டியை, பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி, தனது தோழனுக்கு வீடு கட்ட உதவிக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோழிக்கோடு மாவட்டம் நடைக்காவு பகுதியில் அரசு ஆசிரியர் பயிற்சி மைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த முதல்வர் உம்மன் சாண்டி மேடையை நோக்கி நடந்து சென்ற போது, "உம்மன் சாண்டி" என்ற குரலைக் கேட்டு நின்றார்.
மாணவ, மாணவிகள் மத்தியில் இருந்து ஒரு குரல் வந்ததும், அந்த குரலுக்கு சொந்தமான 2ம் வகுப்பு மாணவி ஷிவானி, தான் தான் உங்களை அழைத்தது என்ற பாணியில் கையை உயர்த்தி நின்றிருந்ததையும் பார்த்து உம்மன் சாண்டி, மாணவியை தன் பக்கமாக அழைத்தார்.
தன்னை ஷிவானி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த மாணவி, தன்னுடன் படிக்கும் அமல் கிருஷ்ணன் என்ற மாணவனின் பெற்றோர் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குடியிருக்க வீடு இல்லாமல் அவதிப்படுவதாகவும், அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் கூறினார்.
இதைக் கேட்ட முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியரை அழைத்து, மாணவி கூறுவது உண்மையா என்று கேட்டறிந்தார். அது உண்மை என்று சொன்னதும், அது குறித்து கோரிக்கை மனு கொடுக்கும்படி கேட்டார். அந்த மனுவில் உடனடியாக வீடு கட்ட ரூ.3 லட்சத்தை ஒதுக்கி கையெழுத்திட்டார்.
விழாவில் பேசிய உம்மன் சாண்டி, தன்னை பெயர் சொல்லி அழைத்த மாணவியை வெகுவாகப் பாராட்டினார்.
உம்மன் சாண்டி என பெயர் சொல்லி அழைத்த சிறுமி..
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:01:00
Rating:
No comments: