வழக்கை இழுத்தடிக்கிறார் ஜெயலலிதா: ஆச்சார்யா

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாராணை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வந்தது.

 
 
கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.
 
இதன் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை கர்நாடக வழக்கறிஞர் துஷ்யந்த் தாவேயின் வாதத்தை தொடர்ந்து ஆச்சார்யா அந்த வாதத்தை தொடர்ந்தார். அவர் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ள பிழைகளை முன் வைத்து வாதம் செய்தார்.
 
ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள் என கூறப்படும் நிறுவனங்கள் பற்றி ஆச்சார்யா வாதிட்டார். இந்நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 
இன்று தொடங்கிய விசாரணையில் ஆஜரான ஆச்சார்யா, ஜெயலலிதா இந்த வழக்கை இழுத்தடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார் என எடுத்த உடனேயே கூறினார். ஜெயலலிதா 2 முறை முதல்வராக இருந்த போது இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந்த வழக்கில் 76 பேர் பிறழ் சாட்சியாக மாறியுள்ளனர் என்றார் ஆச்சார்யா.
 
மேலும் இந்த வழக்கை நடத்த ஜெயலலிதா ஆர்வம் காட்டவில்லை. கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்வதை ஜெயலலிதா தரப்பு கேள்விக்குள்ளாக்க முடியாது. இது வழக்கை இழுத்தடிப்பதற்கான செயல்தான் என்றார்.
 
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பில் தாக்கல் செய்த வாதத்தை முறையாக பரிசீலித்திருந்தால் தீர்ப்பில் கணக்குப் பிழையே ஏற்பட்டிருக்காது. வருமானத்துக்கு அதிகமாக 1 கோடி ரூபாய் சொத்து முறைகேடாக குவிக்கப்பட்டிருந்தாலும் அது முறைகேடானது தான். கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்த வழக்கின் போக்கே மாறிவிட்டது என குற்றம் சாட்டினார் ஆச்சார்யா.
வழக்கை இழுத்தடிக்கிறார் ஜெயலலிதா: ஆச்சார்யா வழக்கை இழுத்தடிக்கிறார் ஜெயலலிதா: ஆச்சார்யா Reviewed by நமதூர் செய்திகள் on 21:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.