அப்சல் குரு தூக்கு விவகாரம்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேள்வி
இந்திய பாராளுமன்றத்தின் மீது தக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குருவை அவசரகதியில் தூக்கிலிட்டது ஏன் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் நீதிபதி கங்குலி அபசல் குருவை அவசர அவசரமாக தூக்கிலிட்டது தவறு எனவும், தனது தண்டனையை எதிர்த்து முறையீடு செய்ய அப்சல் குருவுக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை எனவும் கூறினார்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கழுத்தில் தூக்குக்கயிறை மாட்டி இறுக்கும்வரை அவருக்கான மனித உரிமை சாகாமல் இருக்கும். ஆனால் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை எப்படி நிறைவேற்றப்பட்டது என்பதை ஒரு நீதிபதியாக நான் கூறுகிறேன் என விவரித்தார்.
பிப்ரவரி 3-ஆம் தேதி அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்படுகிறது. 9-ஆம் தேதி அவன் தூக்கிலிடப்பட்டான். இந்த நடவடிக்கை தவறானது, தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முறையீடு செய்ய அப்சல் குருவுக்கு உரிய அவகாசம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது தொடர்பாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் ஆனல் இவை எதுவும் அப்சல் குரு தூக்கு விவகாரத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்றார்.
அப்சல் குரு தூக்கு விவகாரம்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேள்வி
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:50:00
Rating:
No comments: