புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்திய பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையும், சச்சார் கமிஷன் அறிக்கையும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக சூழல் மிகவும் பின்தங்கியுள்ளதாக வேதனையுடன் சமர்பித்தார்கள். பா.ஜ.க அரசால் சச்சார் கமிட்டியின் அறிக்கையை மதிப்பாய்வு செய்வதற்கு நியமிக்கபட்ட போராசிரியர். அமிதாப் குண்டு தலைமையில் கமிட்டி தனது அறிக்கையை கடந்த ஆண்டு செப்டம்பர் 29ல் மத்திய சிறுப்பான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அவர்களிடம் சமர்பித்தது. சச்சார் கமிட்டியின் தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்கள சரியன்றும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு போதுமான இட ஒதிக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதை மீண்டும் இக்கமிட்டி வலியுறுத்தி உள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிறுபான்மை சமுகத்தின் உரிமை பெற்று தருவதில் தொடர்ந்து போராடும் இயக்கமாக தேசியளவில் செயல்படுகிறது. பாப்புலர் ஃ ப்ரண்டின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பள்ளி செல்வோம் என்ற பிரச்சாரத்தின் மூலம் கல்வி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும், சர்வ சக்ஷா கிராம் என்கிற மூழுமையான கல்வி கிராமத்தை ஏற்படுத்தல், ஏழை மாணவ/ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற எண்ணற்ற கல்வி சேவை செய்வதில் பாப்புலர் ஃப்ரண்ட் முன்னணியில் நிற்கிறது.
29-02-2016 அன்று குரூப் ‘B’ பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரியும், மாநில அளவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 4% ஆக உயர்த்தி தர வலியுறுத்தியும், புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி பாப்புலர் ஃப்ரண்ட சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்றது.
புதுவை மாநிலத்தில் அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் குரூப் ‘B’ பணியிடங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரியும், மாநில அளவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 4% ஆக உயர்த்தி தர வலியுறுத்தியும், கடந்த ஒரு வார காலமாக தொடர் பிரச்சாரங்களை பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியா செய்து வருகின்றது. அதில் தெருமுனைக்கூட்டம், நோட்டீஸ் பிரச்சாரம், கலந்தாய்வுகூட்டம், ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி, பத்திரிகையாளர்கள் சந்திப்பு, முக்கியஸ்தர்கள் சந்திப்பு என பல்வேறு வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் இறுதியாக 29-02-2016 (திங்கள் கிழமை) மாலை 4.00 மணி அளவில் கம்பன் கலையரங்கத்தில் இருந்து புதுவை சட்டமன்றத்தை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி பாப்புலர் ஃப்ரண்ட-ன் புதுவை மாவட்ட செயலாளர் J.ரஃபி அவர்கள் தலைமை நடைபெற்றது.
பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினரும், தஞ்சை மண்டல தலைவருமான அமீர் பாஷா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியின் இறுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில், SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் ஆகியோர் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்பேரணியில் கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட்-ன் காரைக்கால் மாவட்ட தலைவர் A.முஹம்மது ஹசன் குத்தூஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக புதுச்சேரி முஸ்லிம்களுக்கு குருப் ‘B’ பணியிடங்களில் இடஒதுக்கீடு வேண்டியும், தற்போதைய இடஒதுக்கீட்டை 4% உயர்த்திட வலியுறுத்தியும் புதுவை மாநில முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்களிடம் கோரிக்கை மனுவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் அளித்தார். இந்நிகழ்வின் போது காரைக்கால் மாவட்ட தலைவர் A.முஹம்மது ஹசன் குத்தூஸ், புதுவை மாவட்ட செயலாளர் J.ரஃபி ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்திய பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:58:00
Rating:
No comments: