நீண்டகால சீர்திருத்தங்களுக்கு உதவாத ‎வாக்கு_வங்கி‬பட்ஜெட்! - ‎SDPI‬ தேசிய தலைவர் கருத்து!


2016-17 ஆம் ஆண்டுக்காண நிதிநிலை அறிக்கையானது நீண்ட கால சீர்த்திருத்தங்கள் மற்றும் தேசிய கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அமையவில்லை என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது; 2016-17 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கிராமப்புற மற்றும் வேளாண்மையை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் பட்ஜெட் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ஆனால் கிராமப்புற மக்களுக்கு பொருளாதார நிவாரணத்தை வழங்குவதற்கு பதில் அவர்களை தாஜா செய்யும் விதத்திலேயே பட்ஜெட் அமைந்துள்ளது.

பீகாரில் அடைந்த படுதோல்வி பாஜகவுக்கு தூக்கமில்லாத இரவுகளை கொடுத்தது. எனவே வரவிருக்கின்ற பல மாநில சட்டமன்ற தேர்தல்களை மனதில் கொண்டு, வாங்கு வங்கி அரசியலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.
நீண்ட கால சீர்த்திருத்தங்கள் மற்றும் தேசிய கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமையவில்லை. பட்ஜெட்டில் வருமான வரிக்கான உச்ச வரம்பை உயர்த்தாமலும், சேவை வரியை உயர்த்தி இருப்பதும் சாதாரண மனிதனை குறிப்பாக நடுத்தர மக்களை ஏமாற்றுவதாக அமைந்துள்ளது.
சிறுபான்மை நலத்துறை நிதி ஒதுக்கீட்டில் கடந்த நிதி ஆண்டை விட 91 கோடி ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகரித்துள்ள பணவீக்கத்தின் அடிப்படையில் போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும், சிறுபான்மை மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை ரூ.1040 கோடியிலிருந்து ரூ.931 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையில் ரூ.30 கோடி அளவிற்கு நிதி குறைக்கப்பட்டு ரூ.550 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் வாடகை வீட்டிலுள்ளவர்களுக்கான வரிச்சலுகைகள், ஏழை மக்களுக்கு பலனளிப்பதற்கு பதிலாக ரியல் எஸ்டேட் தொழிலுக்கு ஊக்கமளிப்பதாகவே அமையும்.
இதுமட்டுமின்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், புதிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி பீமா யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புறம் மேம்படுவதாக தெரிந்தாலும், அத்திட்டங்களின் தேவைக்கு குறைவாகவே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ய்ப்பு திட்டத்திற்கான நிதி ரூ.34,699 கோடியிலிருந்து ரூ.38,500 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக அந்த திட்டத்தின் கீழ் ரூ.41,169 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அரசு ரூ.6470 கோடி பாக்கி வைத்துள்ளது. அதை தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியிலிருந்து கழித்தால், இந்த ஆண்டுக்காண நிதி வெறும் ரூ.32,030 கோடி மட்டுமே. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை விட குறைவானதே ஆகும்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகால சீர்திருத்தங்களுக்கு உதவாத ‎வாக்கு_வங்கி‬பட்ஜெட்! - ‎SDPI‬ தேசிய தலைவர் கருத்து! நீண்டகால சீர்திருத்தங்களுக்கு உதவாத ‎வாக்கு_வங்கி‬பட்ஜெட்! - ‎SDPI‬ தேசிய தலைவர் கருத்து! Reviewed by நமதூர் செய்திகள் on 23:35:00 Rating: 5

No comments:

Powered by Blogger.