ஆஸ்கர் ஆவணப்படம் : 102 நிமிடத்தில் 25 வருட வாழ்க்கை!
கிரிஸ்டன் ஜான்சன் என்ற பெண்மணி தன் வாழ்வில் 25 வருடங்களாக பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு மனிதர்களை படம் எடுத்த வீடியோக்களை 102 நிமிடங்கள் ஓடக்கூடியதாக தொகுத்து உருவாக்கிய ஆவணப்படம் தான் கேமரா பெர்சன். இந்த ஆவணப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி பல திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றது.
தற்போது இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பல சுற்றுக்களைக் கடந்து 15 படங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. படம்பிடிக்கப்படுகிற மனிதர்களுக்கும் கிரிஸ்டன் ஜான்சனுக்கும் இடையே உள்ள உறவை பிரதிபலிக்கக்கூடியதாக இந்த ஆவணப்படம் உள்ளது.
இது ஆவணப்படமாக மட்டுமல்லாமல் ஒரு சுயசரிதையாகவும் விரிகிறது. பாக்ஸிங் காட்சி, போர்ச் சூழல், கிரிஸ்டனின் தாயார், நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு பெண், அப்போதே பிறந்த ஒரு குழந்தை அதற்கு பிரசவம் பார்த்த செவிலியர் என இந்த படத்தின் டிரெய்லரில் இடம் பெறும் காட்சிகள் அனைத்தும், செயற்கையாக உருவாக்கியதாக இல்லாமல், இயல்பு வாழ்வியலை அப்படியே படம்பிடிப்பதாக இருக்கிறது.
ஆஸ்கர் ஆவணப்படம் : 102 நிமிடத்தில் 25 வருட வாழ்க்கை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:35:00
Rating:
No comments: