31 தலித் எம் எல் ஏக்களைக் கொண்ட அதிமுக ஒருவரையாவது அமைச்சராக்க வேண்டும்: திருமாவளவன்
ஆளும் கட்சியில் அதிகார பகிர்வின் போது தலித்துகளுக்கு உரிய பிரிதிநிதிதுவத்தை அளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன்வெளிச்சம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் அமைச்சரவையில் தலித்துகளுக்கு மூன்று அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார். அவர் காலமானதை தொடர்ந்து தற்பொழுது சமூக குழுக்களின் அடிப்படையில் தங்கள் பிரதிநிதித்துவத்தை அல்லது அதிகார பகிர்வை வலியுறுத்தும் நிலை ஆளும் கட்சி அதிமுகவில் நிகழ்வதாக ஊடங்கங்களின் மூலம் அறிய வருகிறோம். ஒவ்வொரு சமூக குழுவும் தங்களுடைய சமூக பிரிவினருக்கு அதிகாரம் வாய்ந்த பொறுப்புகள் வேண்டும் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று தங்களுக்கிடையே போட்டிபோடுவதை ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் 31 பேர் சட்ட மன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதிமுக உறுப்பினர்களிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரு சமூக குழு தலித் சமூகத்தை சார்ந்த சமூகம்தான், ஆனால் அதை விட மிக குறைவாக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டவர்கள் மிக அதிகமான அளவில் அமைச்சர்களாக இருக்கிற நிலை உள்ளது. ஆனால் தலித்துகள் அதிமுகவின் அதிகமான அளவில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தும் கூட அவர்களுக்கான பிரிதிநித்துவம் மிக குறைவாக உள்ளது. எனவே புதிதாக முதல்வர் பொருப்பேற்றிருக்கிற மாண்புமிகு ஓபிஸ் அவர்கள் எம்ஜிஆர் அவர்களின் மீதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் மீதும் நம்பிக்கை வைத்து மிக பெரிய ஆதரவு அளித்த தலித் சமூகத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்கிற வகையில், அதிகார பகிர்வின் போது தலித்துகளுக்கு உரிய பிரிதிநிதிதுவத்தை அளிக்க வேண்டும் என்பது தலித் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனை விடுதலைச்சிறுத்தைகள் சுட்டி காட்ட விரும்புகிறது” என்று கூறினார்.
31 தலித் எம் எல் ஏக்களைக் கொண்ட அதிமுக ஒருவரையாவது அமைச்சராக்க வேண்டும்: திருமாவளவன்
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:36:00
Rating:
No comments: