மக்கள் கவிஞர் இன்குலாப் காலமானார்!


மக்கள் கவிஞர் இன்குலாப் இன்று காலை காலமானார். கடந்த பல வருடங்களாக சர்க்கரை நோய் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் வீட்டிலேயே முடங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார்.
இன்குலாப்பின் இயற்பெயர் எஸ்.கே.எஸ்.சாகுல் அமீது. கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார். இஸ்லாமியக் குமுகத்தில் பிறந்த இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப்படிப்பை கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக்கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் மீரா என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.
மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை (தமிழ்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா.பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. அப்போது உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா.காமராசன், கா.காளிமுத்து, பா.செயப்பிரகாசம் ஆகியோருடன் இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக இறங்கினார். காவல்துறையின் தடியடிகளுக்கும் ஆளானார். சிறைக்கும் சென்றார். ஈழப் போராட்டத்திலும், தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களிலும் அக்கறையோடு பங்கேற்று பல பாடல்களை எழுதி வந்த இன்குலாம் எழுதிய “மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா” என்ற பாடல்கள்தான் தலித் அமைப்புகளின் தேசிய கீதமாக உள்ளது.
மக்கள் கவிஞர் இன்குலாப் காலமானார்! மக்கள் கவிஞர் இன்குலாப் காலமானார்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:06:00 Rating: 5

No comments:

Powered by Blogger.