பொது சிவில் சட்டம் இந்துகளுக்குள் முதலில் கொண்டு வரவேண்டும்: கிருஷ்ணசாமி
பொது சிவில் சட்டம் இந்துகளுக்குள் முதலில் கொண்டு கொண்டுவர வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
“ஒரு நாட்டுக்கு பொதுவான சிவில் உரிமைச் சட்டம் இருக்க வேண்டுமென்பதை நாம் மறுக்க முடியாது. கண்டிப்பாக பொது சிவில் சட்டம் இருக்க வேண்டும். ஆனால் நாடாக இருக்கக்கூடிய ஒரு நாட்டில் தான் அதை செலுத்த முடியும். நாம் இன்னும் நாடாக உருவாகவில்லை. ஏனெனில் நாம் ஒரு சாதியாக இல்லை; ஒரு மொழியாகவும் இல்லை; ஒரு இனமாகவும் இல்லை; ஒரு மதமாகவும் இல்லை. இந்தியா என்பது ஒரு பரந்துபட்ட துணைக்கண்டம். தெற்கே தமிழ் பேசுகிறோம், மலையாளம் பேசுகிறார்கள், கன்னடம் பேசுகிறார்கள். இது போன்ற பல மொழிகளை உள்ளடக்கியது இந்தியா. இங்கு பல மதங்கள் இருக்கின்றன. இந்து மதம் இருக்கிறது; இஸ்லாம் மதம் இருக்கிறது; கிறித்தவ மதம் இருக்கிறது; சீக்கிய மதம் இருக்கிறது; புத்த மதம் இருக்கிறது; இன்னும் பல மதங்கள் இருக்கின்றன; மதங்களே இல்லாதவர்களும் இருக்கிறார்கள். மேலும் இன ரீதியான மக்களும் இருக்கிறார்கள். எனவே இன்னும் இந்தியா ஒரு தேசமாக உருவாகவில்லை. Geographical அடிப்படையில் வரைபடமாக வைத்துக் கொள்கிறோமே தவிர இதய ரீதியாக இந்தியா என்ற நாடு மனதளவில் உருவாக்கப்படவில்லை. Everyone lives in their own country. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீதிக்குள்ளேயே பல நாடுகள் பல தேசங்களாய் இருக்கிறோம். ஆயிரக்கணக்கான சாதிகள் இருக்கின்றன.
இப்படி இருக்கக்கூடிய நாட்டில் உடனடியாக, அவர்கள் சொல்லுகின்ற ஒரு பொது சிவில் சட்டத்தை அமலாக்க இயலாது. அது ஒரு Distant Objective. எல்லோருக்கும் ஒரே சட்டமாக இருக்க வேண்டுமென்பது ஒரு நோக்கம், ஒரு கொள்கை என்பது வேறு. எப்போதுமே Charity begins at home என்று என்று சொல்லுவார்கள். அதாவது அதை எங்கிருந்து கொண்டு வர வேண்டுமென்றால், இந்தியா என்ற நாட்டில் இந்துக்கள் 60% க்கும் மேற்பட்டவர்கள். எனவே இந்த பொது சிவில் சட்டம் என்பதை இந்துக்கள் மத்தியிலிருந்து அமலாக்கிக் கொண்டுவர வேண்டும்.
“நாம் முதலில்ஒரு சாதியாக இருப்போம்; நமக்குள் எந்தவொரு ஏற்றதாழ்வும் இருக்கக்கூடாது; சாதி முழுமையாக ஒழிந்துவிட்டது” என்று முதலில் கொண்டுவர வேண்டும். அப்படி கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா? இந்துக்களுக்கு திருமண முறைகளில் ஏதாவது சட்ட நடைமுறைகள் வைத்திருக்கிறீர்களா? வரைமுறைகள் வைத்திருக்கிறீர்களா? இஸ்லாமியர்கள் குறைந்தபட்சம் திருமணத்தை இப்படித்தான் நடத்த வேண்டுமென்று வரைமுறை வைத்திருக்கிறார்கள். கிறித்தவர்கள் திருமணத்தை இப்படித்தான் நடத்த வேண்டுமென்று வரைமுறை வைத்திருக்கிறார்கள்.
இந்துக்களிடம் ஏதாவது ஒரு வரைமுறை இருக்கிறதா? நீங்கள் வரைமுறையே இல்லாமல், ஒரு வரைமுறை வைத்திருப்பவர்களை போய் அதை ஒழிக்கச் சொன்னால் எப்படி பண்ண முடியும். அங்கே ஒரு இஸ்லாமியர் இன்னொரு இஸ்லாமியரை திருமணம் செய்து கொள்ள முடியும். வேண்டுமென்றால் வேறு ஏதாவது சிறுசிறு பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இங்கு அப்படியில்லை. சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டாலே, ஏன் விரும்பினாலே அவர்களை அவர்களுடைய பெற்றோர்களே தீவைத்து கொளுத்தி விடுகிறார்கள். கொலை செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தேசமாகத் தான் இந்தியா இருக்கிறது. சாதி ஆணவக் கொலைகள் நடக்கக்கூடிய அளவிற்கு ஒரு மோசமான தேசம் இது. அப்படி இருக்கும்போது நீங்கள் பொது சிவில் சட்டம் பற்றி பேச முடியும்?
பொது சிவில் சட்டத்தை முதலில் இந்துக்களுக்குள் கொண்டு வாருங்கள். இந்துக்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான விதிமுறையை கொண்டு வாருங்கள். அதன்பிறகு நாம் இஸ்லாமியருக்குள் போவோம். நாம் கிறித்தவர்களுக்குள் போவோம். இந்துக்களுக்குள்ளேயே ஒரு இந்துவாக நாம் இல்லையே. நீ ஒரு இந்து என்று சொல்லக்கூடிய சகோதரனையே சக மனிதனாக மதித்து நடக்கவில்லையே. உன்னுடைய இந்த வியாதியை இங்கு மட்டுமல்ல, இலண்டனுக்குக் கூட கொண்டு போகிறாய் அல்லவா? அங்கிருக்கக்கூடிய பட்டேல் நான் உயர்சாதிக்காரன் என்கிறார்கள். சாதாரண மக்களை தாழ்த்துகிறார்கள்.
இன்றைக்கு Untochablity-யை ஒரு சட்டமாக கொண்டு வரலாமா என்று இலண்டனில் இருக்கக்கூடிய எம்.பி.க்கள் பாராளுமன்றத்திலே எழுப்புகிறார்கள். எனவே உன்னுடைய மோசமான குணங்களை, உன்னுடைய மோசமான பண்பாட்டை, கலாச்சாரத்தை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதன்பிறகு தான் அடுத்ததற்கு போக முடியும். எனவே பொது சிவில் சட்டம் பற்றி பேசக்கூடியவர்கள், இந்த இந்த சமுதாயத்திற்குள் இருக்கக்கூடிய எல்லாவிதமான Negative Impacts அதாவது, உலகளவிலே இந்துக்கள் மத்தியிலே இருக்கக்கூடிய சாதி கலாச்சாரங்கள், மத கலாச்சாரங்கள் அதிகமான கட்டுப்பாடுகள், பழைமைகள் இவற்றையெல்லாம் முழுமையாக களைவதற்குண்டான நடவடிக்கையை எடுத்து இவற்றை தூய்மைப் படுத்தினாலே, அதாவது நம்முடைய வீட்டை தூய்மைப்படுத்தி அதை வீதியிலே போடாமல் முறையாக அப்புறப்படுத்தினாலே ஒவ்வொரு வீட்டுக்காரர்ளும் திருந்தி விடுவார்கள்.
அப்படி ஏதாவது கிறித்தவ மதத்திற்குள்ளேயோ, இஸ்லாமிய மதத்திற்குள்ளேயோ தவறுகள் இருந்தால் நம்மைப் பார்த்து அவர்களுக்குள்ளும் உள்ளுக்கு இருந்தே அந்த மாற்றங்கள் நடைபெற்றுவிடும். நாம் சட்டம் போட்டு மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இஸ்லாமிய சமுதாயமே நம்மைப் பார்த்து தானாக மாற்றிக் கொள்ளும். அதனால் சட்டங்களால் மட்டுமே மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. சட்டங்களால் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்பது இந்து இந்து சமுதாயத்திற்குள்ளிருந்து துவக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.”
.
.
பொது சிவில் சட்டம் இந்துகளுக்குள் முதலில் கொண்டு வரவேண்டும்: கிருஷ்ணசாமி
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:22:00
Rating:
No comments: