பணம் டெபாசிட் – ரிசர்வ் வங்கி அதிரடி!
கடந்த நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த நிமிடத்தில் இருந்து, மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை டெபாசிட் செய்ய வங்கிகளில் குவிந்து வருகின்றனர். ஆனால், அறிவிப்பு வெளியிட்டு 40 நாட்களாகியும் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமலும், வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாமலும் மக்கள் கடும் சிரமத்திலும் துயரத்திலும் இருக்கின்றனர். இதுவரை இந்த துயரத்தால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய புதிய கட்டுப்பாட்டினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பணம் எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளைப் போல, வங்கிகளில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
அதன்படி, பழைய ரூபாய் நோட்டுகளை அதிகபட்சமாக ரூ.5000 வரை மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்ய முடியும். டிசம்பர் 30ஆம் தேதி வரை ஒரு வங்கிக் கணக்கில் ஒருமுறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்று அதிரடி கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கி ஊழியர்களின் மூலமாக, கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்படுவதைத் தடுக்க, ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. இதன் மூலம், கருப்புப் பணம் தனிநபர் மற்றும் போலி வங்கிக் கணக்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது தடுக்க முடியும் என்று கருதப்படுகிறது.
ஆனால், இந்த அறிவிப்பால் சிறு, குறு வியாபாரிகள் தன் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.
வெனிசூலா நாட்டில் பணமதிப்பிழப்பு அறிவிப்பு அறிவிகப்பட்டது. ஆனால், அங்கு இந்த அறிவிப்பின் காரணமாக ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பணமதிப்பிழப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் டெபாசிட் – ரிசர்வ் வங்கி அதிரடி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:48:00
Rating:
No comments: