மூத்தவர்கள் இருக்க இளையவருக்கு பதவி: முஸ்லிம் என்பதால் புறக்கணிப்பா!
புதுடெல்லி(22 டிச 2016): இந்திய இராணுவ தளபதியாக முத்த அதிகாரி ஜெனெரல் முஹம்மத் ஹாரிஸ் இருக்க அவரைவிட இளையவரான பிபின் ரவாத் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிபின் ரவாத், முஹம்மத் ஹாரிஸ் மற்றும் பிரவீன் பக்ஷி ஆகிய அதிகாரிகளை பயிற்றுவித்த ஜெனெரல் ஹச்.எஸ்.பனாக் குறிப்பிடுகையில், “புதிய இராணுவ தளபதியை நியமனம் செய்வது அரசின் வேலை. இதற்கு முன்னதாக ஒரு முறை மட்டுமே பணியில் மூத்த அதிகாரியை விடுத்து மற்றொருவர் இராணுவ தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் இராணவ தளபதியின் பணி குறித்து எதுவும் தெரியாத அரசின் இந்த முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியது எவ்விதத்திலும் சிறப்பானது இல்லை. நாளை போர் என்று ஒன்று வருமேயானால் அது வெட்டவெளிகளிலும் பாலைவனங்களிலும் நடக்கலாம். அப்போது என்ன ஆகும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அரசு தரப்பில் கூறப்படுகையில், ஜெனெரல் ரவாத் கடந்த முப்பது வருடமாக பல போரட்ட பகுதிகளில் முதற்கட்ட அனுபவம் பெற்றவர் என்று தெரிவித்துள்ளது. எனினும் ரவாத்தை பிற அதிகாரிகள் அங்கீகரிக்கவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே இந்திய இராணுவ தளபதியாக ஜெனெரல் பிபின் ரவாத் நியமனம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் கம்மியுனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கு முன்பு 1983 இல் இந்திரா காந்தி ஆட்சியில் இருக்கும் போது மூத்த அதிகாரி ஜெனெரல் சின்ஹா இருக்க இளையவரான ஏ.எஸ்.வைத்யாவுக்கு தளபதி பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால். இந்திராகாந்தியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனெரல் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மூத்தவர்கள் இருக்க இளையவருக்கு பதவி: முஸ்லிம் என்பதால் புறக்கணிப்பா!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:46:00
Rating:
No comments: