தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஜாகிர் நாயக் மனு!


சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகரான ஜாகிர் நாயக் நடத்திவரும் ‘இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை’ கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாகிர் நாயக் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி சஞ்சீவ் சச்தேவா தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உடனடியாக அறக்கட்டளையை தடை செய்ய வேண்டிய காரணம் குறித்து ஆவனங்களை சமர்பிக்குமாறு மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையில், இது குறித்து இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சட்ட விரோத தொடர்பு என்று அரசு அளித்த அறிவிக்கையில் தடைக்கான காரணங்கள் கூறப்படவில்லை என தெரிவித்தார்.
ஆனால்,கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் “தடைக்கான அனைத்து காரணங்களும் கூறப்பட்டுள்ளன, இதற்கு முன்பாகவே அமைப்பின் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்பில்லாத பயங்கரவாத வழக்குகளில் கைதான பல இளைஞர்கள் , ஜாகிர் நாயக்கின் உரை உத்வேகம் அளித்ததாக தெரிவித்துள்ளனர். அதைவிட ஒரு நாட்டுக்கு அவசரமான சூழ்நிலை எதுவாக இருக்க முடியும்? என மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் நீதிபதி அமர்வு, தடை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 நவம்பர் 15 ஆம் தேதி, ஜாகிர் நாயக் நடத்திவரும் ‘இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை’ க்கு மத்திய அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் தடை விதித்தது. இளைஞர்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் ஜாகிர் நாயக்குக்கு எதிராக மகாராஷ்டிர மாநில போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்தனர். மேலும், கேரளாவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி,வங்கதேச தலைநகர் டாக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ரோஹன் இம்தியாஸ், ”ஃபேஸ்புக் பதிவில் ஜாகிர் நாயக்கின் உரை எனக்கு ஊக்கமளித்தது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஜாகிர் நாயக் மனு! தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஜாகிர் நாயக் மனு! Reviewed by நமதூர் செய்திகள் on 20:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.