சிரிய அகதிகளுக்கு சவுதி நிவாரண உதவி!
சவுதியின் ‘அரசர் சல்மான் நிவாரண உதவி மையம்’ சிரிய அகதிகளுக்கு நிவாரண உதவி அளிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த வியாழன் அன்று, உதவி பொருட்கள் சுமந்த 25 ட்ரக்குகள், துருக்கிய-சிரிய எல்லையை கடந்து சென்றிருக்கிறது. வண்டிகளில்,சவுதி அரசு, ஆலெப்போவில் இருந்து புலம் பெயர்ந்தோருக்காக அளித்த நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவுகள், குளிர்கால உடைகள், சோப்பு போன்ற பொருட்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. போர் காரணமாக பாதிக்கப்படும் சிரிய மக்களுக்கு உதவுவதற்காக வேறு பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது சவுதி அரசு.
இது குறித்து, நிவாரண மையத்தின் இயக்குனர் அப்துல்லா பேசும் போது, “சிரியாவின் போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயப்பட்டவர்களின் தகவல்களை அறிந்து கொண்டு, அங்கே என்னென்ன தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொண்டுதான் உடனடியாக உதவி திட்டங்களை அரசு அமல்படுத்துகிறது. மக்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கேற்றது போல நிவாரண திட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். குறிப்பாக, ஆலெப்போவில்” எனத் தெரிவித்தார்.மேலும் அவர், துருக்கியின் அல்-ரேஹனியாஹ் நகரைக் கடந்து இருபத்தைந்து உதவி வண்டிகள் சேரிகளுக்கும், அவசர உதவி தேவைப்படும் பகுதிகளுக்கும் சென்றுவிட்டன எனவும், இதனால் அம்மக்களுக்கு தற்காலிக பாதுகாப்பும், அடிப்படை சுகாதார உதவியும் கிடைக்கும் எனவும் கூறினார்.
சிரிய அகதிகளுக்கு சவுதி நிவாரண உதவி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:50:00
Rating:
No comments: