அகதிகளுக்கு ட்ருடோ அழைப்பு!
குறிப்பிடப்பட்ட சில நாடுகளிலிருந்து வரும் அகதிகள் அமெரிக்காவிற்குள் செல்வதற்கு ட்ரம்ப் தடை விதித்திருக்கும் வேளையில், அகதிகளை கனடா வரவேற்கிறது என தன் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார் ஜஸ்டின் ட்ருடோ.
“பயங்கரவாதத்தாலும், போராலும்” வீடும், நாடும் இழக்கும் அகதிகள், கனடாவிற்கு வரலாம்என தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டிருக்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ. கடந்த 13 மாதங்களில்,ஏறத்தாழ நாற்பதாயிரம் சிரியா அகதிகளுக்கு கனடாவை வீடாக்கியதற்காக சர்வதேச கவனத்தை பெற்றவர் ட்ருடோ.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று , இராக், சிரியா , சூடான், இரான், சொமாலியா, லிபியா, ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகள் 90 நாட்களுக்கு அமெரிக்காவிற்குள் வர அனுமதி மறுக்கும் குறிப்பாணை ஒன்றில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். உலகின் பல்வேறு முனைகளிலும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது ட்ரம்பின் இந்த ஆணை.
ட்ரம்பின் அரசியலிற்கும், ட்ருடோவின் அரசியலிற்கும் பல வித்தியாசங்கள் இருக்கும் போதும், ட்ருடோ ட்ரம்பை விமர்சிக்கவில்லை. மாறாக, கனடாவின் பெருந்தன்மையை செயலில் காட்டியிருக்கிறார். “Welcome to Canada” எனும் ஹேஷ்டேக், ட்ருடோபின் அறிவிப்பை தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே மாபெரும் ட்ரெண்டாக மாறியிருக்கிறது.
அகதிகளுக்கு ட்ருடோ அழைப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:51:00
Rating:
No comments: