பொருளாதார தீவிரவாதம்-மம்தா
பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு எதிரான பொருளாதார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து இருக்கிறார் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு 5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சரிவர நடக்காமல் முடங்கி போனது. மோடியின் இந்நடவடிக்கையை எதிர்த்து வரும் அரசியல் தலைவர்களில் மம்தா பானர்ஜியே முதன்மையானவர். அவர் மோடி மிது அடுக்டுக்காக குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மோடியின் இந்நடவடிக்கை மக்களுக்கு எதிராக மோடி கட்டவிழ்த்து இருக்கும் பொருளாதார தீவிரவாதம் என்று கூறினார்.
இதுகுறித்து மேற்கு வங்காளம் மாநிலம், மிட்னப்பூர் மாவட்டத்தில்நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது,
ரூ.500, 1000 நோட்டுகளை தடை செய்யும் பண மதிப்பு பறிப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்களுக்கு எதிரான பொருளாதார தீவிரவாதத்தை பிரதமர் மோடி கட்டவிழ்த்து விட்டார். கடந்த நவம்பர் மாதம் அவர் பிறப்பித்த உத்தரவினால் நாட்டில் பத்துகோடி மக்கள் வேலை இல்லாமல் திண்டாட நேரிட்டுள்ளது
நாட்டிலுள்ள 90 சதவீதம் புறநகர் பகுதிகளில் போதுமான வங்கி வசதிகள் இல்லாத நிலையில் பிரதமரின் பணஒழிப்பு நடவடிக்கையால் சராசரி மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதனால், பொருளாதார ரீதியாக நாடு பின்தங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
பொருளாதார தீவிரவாதம்-மம்தா
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:00:00
Rating:
No comments: