எலும்பு அடர்த்திக்கு உலர் திராட்சை!
உலர்திராட்சையில் வைட்டமின் சி, பொட்டாசியம், ரத்த சிவப்பணுக்கள் பெருகுவதற்கு தேவையான இரும்பு சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் தேவையான அளவு இருப்பதால் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்றியமையாத உணவாக விளங்குகிறது.
வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால், எலும்புகள் உறுதிபெறவும், பற்கள் வலுப்பெறவும், உடல் வளர்ச்சி பெறவும் பெரிதும் உதவுகிறது.குழந்தைகள் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியுடன் விளங்க, தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன் உலர்திராட்சையை பாலில் போட்டு காய்ச்சிக் குடித்தால், அருமையான பலனை பெற முடியும்.
உலர் திராட்சை இரும்பு சத்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். உலர்திராட்சையை வெறும் வாயில் போட்டு, மென்று தின்று வந்தால் எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து வலுவாக்கும்.தொண்டையில் சளி, இருமல், தொண்டைக்கட்டி சரியாக பேச முடியாமல் இருப்பது போன்ற சிக்கல்களுக்கு பாலில் மிளகுத்தூள், பனங்கற்கண்டு, உலர்திராட்சை ஆகியவற்றை கலந்து சூட வைத்த காய்ச்சிய பாலை அருந்தினால் இச்சிக்கல்கள் விலகும்.
உடல் வலியால் அவதிப்படுபவர்கள் சுக்கு, பெருஞ்சீரகம், உலர்திராட்சையையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் சாறை அருந்தினால் உடல் வலி பறந்து போகும். கர்ப்பிணிப் பெண்களும் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை நலமுடன் நோயின்றி பிறக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தினமும் ஒரு பத்து உலர் திராட்சைப் பழத்தை தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட்டு வந்தால், உங்களின் உடல் எதிர்ப்புசக்தி, எலும்புகளின் பலம், தாது சக்தி, உற்பத்தித்திறன் என அனைத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் சித்த, யூனானி மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எலும்பு அடர்த்திக்கு உலர் திராட்சை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:54:00
Rating:
No comments: