ராபிஆ கூட்டுப் படுகொலையைக் குறித்து சர்வதேச விசாரணை தேவை: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்!


ஜெனீவா: எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியை அநீதமாக பதவி நீக்கம் செய்து ராணுவ சதிப்புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்தின் நடவடிக்கையை கண்டித்து ராபிஆ அதவியாவில் போராட்டம் நடத்திய பொதுமக்களை கொடூரமாக கூட்டுப்படுகொலைச் செய்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க சர்வதேச அளவிலான விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் இந்த கூட்டுப்படுகொலையில் உயிரை இழந்துள்ளனர்.2013 ஆகஸ்ட் மாதம் கெய்ரோவில் நடந்த அமர்வில் சர்வதேச சட்டப்படி எகிப்திய அதிகாரிகள் புகார் அளிக்கவில்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.ஜெனீவாவில் வைத்து நடந்த ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில்தான் இதனை வெளியிட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி எகிப்திய ராணுவம், ராபிஆ சதுரத்தை சுற்றி வளைத்து தாக்கி அங்கு கூடியிருந்த அப்பாவி மக்களை கொடூரமாக கொலைச் செய்தது.இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்ததாக இஃவானுல் முஸ்லிமீன் உறுதிச் செய்துள்ளது.
ராபிஆ கூட்டுப் படுகொலையைக் குறித்து சர்வதேச விசாரணை தேவை: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்! ராபிஆ கூட்டுப் படுகொலையைக் குறித்து சர்வதேச விசாரணை தேவை: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.