இந்தி முதன்மை மொழி - தமிழக எதிர்ப்பைத் தொடர்ந்து திரும்பப்பெற முடிவு!


சென்னை: இந்தியை முதன்மை மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக்குழுவின் முடிவை திரும்பப்பெற UGC முடிவு செய்துள்ளது செய்துள்ளது.
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் இந்தியை முதன்மை மொழியாக கற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்ள பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது.
இதனை திரும்பப்பெறும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறிய பல்கலைக்கழக மானியக்குழு தலைவர், ஆங்கிலத்துடன் இந்தியையும் முதன்மை மொழியாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உள்நோக்கம் கொண்டதல்ல , எப்படி கற்றுக்கொடுக்க வேண்டும் என்ன பயிற்றுவிக்க வேண்டும் என்பது பல்கலைக்கழகத்தின் தனியுரிமை என்றும் தெரிவித்தார்.

பட்டப்படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தியையும் முதன்மை மொழியாக கற்றுக்கொடுக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது இதற்கு முதல்வர் உட்பட தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தி முதன்மை மொழி - தமிழக எதிர்ப்பைத் தொடர்ந்து திரும்பப்பெற முடிவு! இந்தி முதன்மை மொழி - தமிழக எதிர்ப்பைத் தொடர்ந்து திரும்பப்பெற முடிவு! Reviewed by நமதூர் செய்திகள் on 22:43:00 Rating: 5

No comments:

Powered by Blogger.