லவ் ஜிஹாத் புரளி


கற்பனையான லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக சங்பரிவாரால் துவக்கப்பட்டுள்ள அவதூறுப் பிரச்சாரம் பழைய தந்திரமேயன்றி வேறில்லை என்றும் இதன் மூலம்மதரீதியாக மக்களை பிரித்து எளிதான அரசியல் ஆதாயம் அடைவதற்கு சங்பரிவார் முயல்வதாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக நாட்டின் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் தீய பிரச்சாரத்திற்கு பலியாகிவிடக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப், மேலும் கூறுகையில்,’இந்த(லவ் ஜிஹாத்) தந்திரம் கேரளாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாகும். கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் அம்மாநில காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில், ’லவ் ஜிஹாது பிரச்சார இயக்கத்திற்கான’ எவ்வித ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் உருவான இந்த அவதூறு பிரச்சாரம் விரைவாக மாய்ந்துபோனது.
தங்களது மதம் மற்றும் இனம் பற்றி பொருட்படுத்தாமல் இந்நாட்டு இளைஞர்கள் காதல் வயப்பட்டு திருமணம் புரிவது பலகாலமாக நடந்து வருகிறது.சில வேளைகளில் சாதீய மற்றும் தீவிர பழமைவாத சமூகத்தினர் காதல் திருமணம் புரிந்துகொண்ட ஜோடிகளை உயிரோடு எரித்துக்கொலை செய்த சில சம்பவங்களை தவிர்த்தால் இது சம்பந்தப்பட்ட குடும்பங்கள் கவலைப்படுகின்ற விஷயமாகவே இதுவரை இருந்து வருகிறது. இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தீவிர இந்துத்துவா பிரிவினைவாத குழுக்களை தவிர அரிதாகவே அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. தெற்கு கர்நாடகாவில், முஸ்லிம்கள் இந்துப்பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து பின்னர் அவர்களை மதம் மாற்றி தங்களது மதத்தில் சேர்த்துள்ளதாக ஸ்ரீராம் சேனா என்ற தீவிர வகுப்புவாத அமைப்பு தீய நோக்கத்துடன் கூடிய குற்றச்சாட்டை முன்வைத்தது.மேலும், இவ்வாறு மதம் மாற்றப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள ஜிஹாதிகளுக்கு விற்கப்பட்டதாகவும் கூட குற்றம் சாட்டப்பட்டது. நிச்சயமாக இது இந்துத்துவாவின் காட்டுமிராண்டித்தனமான கற்பனையாகும்.மேலும் இந்த முழுப் பிரச்சாரத்திட்டமும் விரைவிலேயே நொறுங்கிப்போனது.
இந்த உண்மைகளெல்லாம் இருந்தபோதிலும், லவ் ஜிஹாத் என்பது உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் ஆதாயம் பெறுவதற்கான தூண்டுகோலாகவே கருதப்படுகிறது. பல்வேறு மதத்தவர்களிடையே நடைபெற்ற திருமணங்களின் புள்ளிவிபரங்களை வெளியிட்டு இந்துத்துவா குழுக்களின் அவதூறு பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கே.எம்.ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இப்பிரச்சாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

லவ் ஜிஹாத் புரளி லவ் ஜிஹாத் புரளி Reviewed by நமதூர் செய்திகள் on 00:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.