அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பெண் மரணம்!


கடையநல்லூர்: அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் சிகிச்சைக்குச் சென்ற பெண். சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார்.
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம், தெற்கு விளைத்தெருவை சேர்ந்த குமார் மனைவி சத்யா (25). இவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு ஆக்சிஜன் வசதி இல்லாததால் சத்யாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர்.. இதைத்தொடர்ந்து அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாததால் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்குள் சத்யா மரணம் அடைந்துவிட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தான் சத்யா உயிருக்கு போராடி இறந்ததாக குற்றம்சாட்டி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகவும், அரசு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சிய போக்கை கண்டித்தும் எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு பூட்டு போட்டு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை சிறைபிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புளியங்குடி டி.எஸ்.பி. வானமாமலை, கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் சபாபதி, தென்காசி தாசில்தார் சொர்ணராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பெண் மரணம்! அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பெண் மரணம்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:50:00 Rating: 5

No comments:

Powered by Blogger.