சுங்கவரியா...? நெடுஞ்சாலை வழிப்பறியா...?

அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!
20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு..
சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாலை சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம். காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிட படுகிறது. ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும். ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது, சிறிய வாகனத்திற்கு ரூ.35ம், நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம், பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம், கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது. நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.
90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல்.
63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல்.
18,90,00,000×12= 226, 80,00,000 ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம்.
226,80,00,000×10 = 2,268,00,00,000.
வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.
ஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..?
இப்போது சொல்லுங்கள் இது சுங்கவரியா...? நெடுஞ்சாலை வழிப்பறியா...?
இதை நாம் எதிர்க்க முடியாது காரணம் தனியார் முதலீட்டை வரவேற்க்கும் அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி, இந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா..?
நன்றி: கபிலன்.பெ(ஜூனியர் விகடன்)
சுங்கவரியா...? நெடுஞ்சாலை வழிப்பறியா...? சுங்கவரியா...? நெடுஞ்சாலை வழிப்பறியா...? Reviewed by நமதூர் செய்திகள் on 21:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.