உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்? நீங்கள் கேட்ட 5 கேள்விகள்


1.எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் என்றால் என்ன?
உங்கள் வங்கிக் கணக்கிலுள்ள டெப்பாசிட் தொகையில் 90 சதவீதத்தை உங்களையே கேட்காமல் எடுத்து வங்கியை நஷ்டத்திலிருந்து பாதுகாப்பதற்குப் பயன்படுத்தலாம் என்பதை அனுமதிக்கும் மசோதாவுக்குத்தான் எஃப்.ஆர்.டி.ஐ (Financial Resolution and Deposit Insurance Bill, 2017) என்று பெயர். இந்த மசோதாவின் 52வது உட்பிரிவு உங்கள் பணத்தை எடுத்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அதிகாரத்தை வங்கிகளுக்கு வழங்குகிறது.
2.இந்த மசோதா வருவதற்கு என்ன காரணம்?
2014ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த G20 (20 உலக நாடுகளின் குழுமம்) மாநாட்டில் வங்கிகள் நஷ்டமடைந்து தோல்வியடைவதைத் தடுக்க அதில் முதலீடு செய்துள்ள மக்கள் (டெப்பாசிட்டர்கள்) பொறுப்பேற்க வேண்டும் என்கிற முடிவெடுக்கப்பட்டது; இதைத் தொடர்ந்து எஃப்.ஆர்.டி.ஐ மசோதாவை ஆகஸ்ட் 2017இல் இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்கள்.
3.இந்த மசோதாவை மற்ற நாடுகள் கொண்டு வந்துள்ளனவா?
இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 24 நாடுகளில் ஆஸ்திரேலியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்னாப்ரிக்கா, இந்தோனேசியா உள்பட 13 நாடுகள் இன்னமும் இதனை மசோதாவாகக்கூட முன்வைக்கவில்லை. இதனை அறிமுகம் செய்தால் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடுவோம் என்று மற்ற நாடுகள் அஞ்சுகின்றன.
4.இந்த மசோதாவில் என்ன பிரச்சினை?
வங்கிகளுக்கு மூலதனத்தைக் கொண்டு வரும் தனிநபர்கள் ஏன் அந்த வங்கியின் நிர்வாகத் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்? இந்தியாவின் வங்கிகளில் சாதாரண மக்கள் போட்டிருக்கிற 105 லட்சம் கோடி ரூபாய் பணம் இருக்கிறது. இதில் 70 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பொதுத்துறை வங்கிகளில் மக்களால் போடப்பட்டுள்ளது. மக்களுக்குச் சொந்தமான இந்தப் பணம் அவர்களுக்கில்லை என்று முடிவெடுக்க இந்த மசோதா வழி செய்கிறது.
5.வங்கிகள் ஏன் தோல்வியடைகின்றன?
பெரும் கார்ப்பரேட் வணிக நிறுவனங்களுக்கும் வங்கியின் நிர்வாகங்களுக்கும் இருக்கும் நேர்மையற்ற கூட்டுதான் வங்கிகளின் வாராக்கடன் சுமை பெருகுவதற்கான மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. சில சமயங்களில் அரசியல் அழுத்தங்களால் பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன்களும் வாராக்கடன்களாகி வங்கிகள் தோல்வியை நோக்கித் தள்ளப்படுகின்றன.
உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்? நீங்கள் கேட்ட 5 கேள்விகள் உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்? நீங்கள் கேட்ட 5 கேள்விகள் Reviewed by நமதூர் செய்திகள் on 23:30:00 Rating: 5

No comments:

Powered by Blogger.