கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்

மின்னணு வாக்கு எதிரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்வி எழுப்பப்பட்டும் அவை பல நேரங்களில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன.  இந்நிலையில் வர இருக்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சித்தாராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து பல நிபுணர்களிடம் பேசிய அவர், “அவர்களிடம் (பாஜக விடம்) அதிகாரம் இருக்கின்றது. தேர்தல் ஆணையம் அவர்களுக்கு கீழ் உள்ளது. அது சுதந்திரமான அரசியல் சாசன அமைப்பு என்றாலும் கூட தலைமை தேர்தல் அதிகாரியை மத்திய அரசு தான் நியமிக்கின்றது.” என்று மின்னணு வாக்கு எந்திர முறைகேடுகள் குறித்த கேள்வி ஒன்றிற்கு அவர் பதிலளித்துள்ளார்.
கர்நாடகாவின் ராய்சூரில் பத்திரிகையாளர்களிடம், “நாங்கள் என்ன கூறுகின்றோம் என்றால் முன்பு போல் வாக்குசீட்டு முறைக்கே மாறிவிடுங்கள் என்று கூறுகின்றோம். அதல் என்ன சிக்கல் உள்ளது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் மின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இது போன்றதொரு குற்றச்சாட்டு உத்திரபிரதேச தேர்தலின் போதும் எழுப்பப்பட்டது. அங்கும் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது.
பல நாடுகள் மின்னணு வாக்கு எந்திர முறையில் இருந்து வாக்குச் சீட்டு முறைக்கே சென்றுவிட்டனர் என்று கூறிய அவர், “நாங்கள் இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியும் தேர்தல் ஆணையத்தை சந்திக்கவும் உள்ளோம். நாங்கள் கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்துவோம்.’ என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல் Reviewed by நமதூர் செய்திகள் on 00:16:00 Rating: 5

No comments:

Powered by Blogger.