கண்சிமிட்டிய பட்டாம்பூச்சி (சிறுகதை) - மு.உமர் முக்தார்



கோகிலாவிற்காக முத்து அவன் வீட்டருகில் இருக்கும் பூங்காவில் காத்திருந்தான். மாலைநேரம் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி துள்ள விளையாடிக்கொண்டிருந்தது. சூரியன் மெதுவாக டாட்டா காட்டிக்கொண்டிருந்தது. நடைபயிர்ச்சி மேற்கொண்டிருந்தார்கள் பெரியோர்கள். இனிமையான காற்று உடலினில் உரசி என்னவோ சொல்லிக்கொண்டிருந்தது. கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் நெருங்கியது. அவன் கண்கள் சுற்றியும் பார்த்துக்கொண்டிருந்தது.   கோகிலா வந்தால். வேலையிலிருந்து நேராக வந்ததால் களைத்து போயிருந்தால். சாரி குமார் கொஞ்சம் வேலை அதிகம். அதான் நேரமாகிடிச்சி.

என்ன கோகிலா விஷயம். ஏன் வரச்சொன்ன குமார் வினவினான். ஏன் உனக்கு தெரியாதா என்றால் கோகிலா. நமக்குள் அதெல்லாம் சரிப்படாது. நீ படிச்சவள்; நல்ல வேளையில் இருக்கிறே. என்ன பத்தி உனக்கே தெரியும். நான் படிக்காதவன். எண்ணிலையை பார்த்துக்கொண்டுதான் இருக்க குமார் இழுத்தான்.

குமார் நீ படிக்காதவனா இருந்தாலும், உன் நல்ல மனது எனக்கு பிடித்திருக்கிறது. உன்னைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று எப்போதே முடிவு செய்துவிட்டேன்.
நீ ஏன் தயங்குற; உன் கை ஊனமா இருக்குன்னா. அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்ல. உனக்கு இன்னொரு கையா நான் இருப்பேன். பரிதாபத்தால உன்ன விரும்பல. உன் செய்கைகளை தொடர்ந்து பார்த்துதான் உன்ன விரும்புறேன்.

கோகிலா எனக்கு பல வரம் வந்துச்சு. எல்லாமே எனக்கு ஒரு கை ஊனமுன்னு தெரிஞ்சதுமே வேணாம்னு சொல்லிட்டாங்க. அதனாலே எனக்கு திருமண ஆசையே இல்ல. எப்படியாவது என் தம்பிய நல்லா படிக்க வைக்கணும், வயதான நிலையில் உடல்நலக்குறைவோடு இருக்குற என் அம்மாவை காப்பாற்றணும். இதுமட்டும்தான் என் சிந்தனையில் இப்போது இருக்கிறது. வேற எந்த விருப்பமும் எனக்கு இல்ல.

இதுதான் உன்கிட்ட பிடிச்சது. நல்லா இருக்கிறவங்களே வேலைக்கு போகாமே சுத்துற காலத்துல. இந்த நிலையிலேயும் உன்னைப்பத்தி கவலைப்படாம உன் குடும்பத்த பத்தி கவலை படுற இந்த மனசுதான் என்னை கவர்ந்திடுச்சி. எங்க வீட்டுலையும் நான் உறுதியா சொல்லிட்டேன். நீதான் என் கழுத்துல தாலிகட்டுவேன்னு. அவங்களை ஒருவழியா சம்மதிக்க வைச்சிட்டேன். இனி நீதான் சொல்லணும்.

நாளைக்கு மீண்டும் இங்க சந்திப்போம். நல்ல முடிவா சொல்லு. நான் கிளம்பறேன் சரியா. மனதில் இருந்த பாரத்தை தூக்கி எறிந்தவளாக அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒருகுழந்தையின் கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டு கோகிலா துள்ளிக்கொண்டு பறந்தால். கிளம்பி அவள் சிறிதாகி மறைகிற வரையில் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் குமார். பூங்காவை வட்டமடித்துக்கொண்டிருந்த பட்டாம்பூச்சி ஒன்று அவன்மேல் உட்கார்ந்து கண்சிமிட்டியது. அவனும் கண்சிமிட்டினான்.

- மு.உமர் முக்தார்
கண்சிமிட்டிய பட்டாம்பூச்சி (சிறுகதை) - மு.உமர் முக்தார் கண்சிமிட்டிய பட்டாம்பூச்சி (சிறுகதை) - மு.உமர் முக்தார் Reviewed by நமதூர் செய்திகள் on 04:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.