ஊதியத்தை நிவாரணமாக வழங்கும் கேரள அமைச்சரவை!

ஊதியத்தை நிவாரணமாக வழங்கும் கேரள அமைச்சரவை!

ஊதியத்தை நிவாரணமாக வழங்கும் கேரள அமைச்சரவை!
கேரள அமைச்சர்கள் அனைவரும் தங்களது ஒருமாத ஊதியத்தை ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்குவதாகக் கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நிவாரணத்திற்கென நிதி வழங்குமாறு மக்களிடமும் அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஓகி புயலால் கேரளாவில் ஏராளமான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று (டிசம்பர் 13 ) நடைபெற்றது. இதில், நிவாரண நிதிக்காக அம்மாநில அமைச்சரவை தனது ஒரு மாத ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள், தொழிலதிபர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் போன்றோரும் நிதி அளிக்க வேண்டும் என்று பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓகி புயல் காரணமாக கேரளாவில் 58 பேர் பலியாகியுள்ளதுடன், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். பல கோடி ரூபாய் அளவுக்குப் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. புயலில் சிக்கி இறந்த மீனவர்கள் குடும்பத்துக்குத் தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இறந்தவர்களின் குடும்பங்களில் தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பும், பிரதமரின் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய ரூ. 1842 கோடியை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடமும் கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது.
ஊதியத்தை நிவாரணமாக வழங்கும் கேரள அமைச்சரவை! ஊதியத்தை நிவாரணமாக வழங்கும் கேரள அமைச்சரவை! Reviewed by நமதூர் செய்திகள் on 23:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.