மோடியின் அழகு ரகசியம்!

மோடியின் அழகு ரகசியம்!

சர்ச்சைகளுக்கும் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சம் வைக்காத குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இப்போது இன்னொரு சரவெடியைப் பற்ற வைத்திருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளரும் அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவருமான அல்பேஷ் தாக்கூர்.
நேற்று (டிசம்பர் 12) செவ்வாய் அன்று பேசிய அவர், நரேந்திர மோடியின் அழகின் ரகசியம் அவர் சாப்பிடும் தைவான் நாட்டு காளான்கள்தான் என்று கூறி அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய அல்பேஷ், “பிரதமர் நரேந்திர மோடி ஆரம்ப கட்டங்களில் கறுப்பாகத்தான் இருந்தார். பின் எப்படி இவ்வளவு சிகப்பாக மாறினார் என்று உங்கள் யாருக்கேனும் தெரியுமா?
எனக்குத் தெரியும். மோடி பேச்சில்தான் குஜராத், குஜராத் என்று பொங்குவார். ஆனால், அவருக்கு குஜராத்தி உணவு வகைகளே பிடிக்காது. மோடி பல ஆண்டுகளாக தைவான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த காளான்களைத்தான் சாப்பிட்டு வருகிறார். அந்த ஒரு காளானின் விலை 80 ஆயிரம் ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று தேர்தல் பிரசாரத்தின் திசையைத் திருப்பியிருக்கிறார் அல்பேஷ்.
மேலும், “மோடி ஒரு காளான் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து காளான்களை தினந்தோறும் உண்ணுகிறார். அவர் குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே இப்படித்தான் உணவுப் பழக்கம் வைத்திருக்கிறார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பத்து லட்ச ரூபாய் கோட் சர்ச்சையில் சிக்கிய மோடி இப்போது ஒரு காளான் 80 ஆயிரம் மதிப்பில் தினந்தோறும் ஐந்து காளான்கள் சாப்பிடுகிறார் என்ற சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
குஜராத் தேர்தலால் நாடு முழுவதும் சுவாரஸ்யம் பரவியிருக்கிறது
மோடியின் அழகு ரகசியம்! மோடியின் அழகு ரகசியம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:50:00 Rating: 5

No comments:

Powered by Blogger.