மதுரா காவல்துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணன் உருவம் பொறிக்கப்பட்ட புதிய சீருடை


உத்திர பிரதேச அரசால் விரிந்தாவன் நகரம் புனித யாத்திரைத் தளமாக அறிவிக்கப்பட்டதால் மதுராவில் உள்ள காவல்துறையினருக்கு விரைவில் புதிய சீருடைகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய சீருடையில் உள்ள காவல்துறை லோகோவில் கிருஷ்ணனின் படம் இருக்கும் என்றும் அதில் சுற்றுலா காவல்துறை என்று எழுதப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் காவலர்கள் அவர்களது வழக்காமான சின்னங்களையும் சீருடைகளில் அணிந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய லோகோவிற்கான நோக்கம் உத்திர பிரதேச காவல்துறையை சுற்றுலாப் பயணிகளுக்கு நெருக்கமாக்குவது” என்று மதுராவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வப்னில் மங்கைன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஃபதெஹ்பூர்சிக்ரியில் ஸ்விச்ஸ் தம்பதிகள் அப்பகுதி இளைஞர்களால் தாக்கப்பட்ட நிலையில் காவல்துறைக்கு புதிய சீருடை வழங்குவதும் அந்த சீருடையில் கிர்ஷ்ணன் படம் பொறிப்பதும் எப்படி சுற்றுலாப் பபயனிகளுக்கு உதவும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் மதசார்பற்ற இந்த நாட்டில் அரசின் பிற துறைகளைப்போல காவல்துறையும் எந்த ஒரு மதம் சார்ந்து இருத்தல் கூடாது. ஆனால் இந்த புதிய லோகோவை  தயாரிக்க முன்மொழிதல் கொடுக்கப்பட்டுவிட்டது என்றும் விரைவில் அது புதிய சீருடையில் தைக்கப்பட்டு காட்சிப் படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த லோகோவிற்கான மாதிரி தயாரிக்கப் பட்டுவிட்டாலும் இதற்கான முன்மொழிதல் டிஜிபி அலுவகத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
உத்திரப் பிரதேச அரசின் இந்த முயற்சியை பலரும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் தேசத்தை காவிமயமாக்குதலின் ஒரு பகுதி என்று தான் கருதுகின்றனர். சமீபத்தில் உத்திர பிரதேச தலைநகரில் உள்ள அரசு கட்டிடங்கள் அனைத்தையும் காவி நிறத்தில் நிறமாற்றம் செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த லோகோ முன்மொழிதல் குறித்து உத்திர பிரதேச முன்னாள் டிஜிபி பிரஜ் லால் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “இந்த புதிய லோகோ அனுமதிக்கப்படக் கூடாது. அவை தேசத்தின் மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது.” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் விவேக் பன்சால், “இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. அரசு எந்த ஒரு மதத்தையும் அளவு மீறி ஆதரிப்பதோ பிரச்சாரம் செய்வதோ கூடாது. விரிந்தாவன் இந்துக்கள் மற்றும் வரக்கூடிய தளம் அல்ல. அனைத்து மத நம்பிக்கைகள் உடையவர்களும் அங்கு வருகை தருகின்றனர். இந்த புதிய லோகோ அரசியல் சாசனத்தை மீறும் செயல்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்ரா நகர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜாமிளுதின் குரேஷி, ”இந்த லோகோ காவல்துறைக்கு உகந்ததல்ல. காவல்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இது இழக்கச் செய்யும். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது மத சார்பற்ற நாடு. குறிப்பிட்ட மத கடவுகளின் படங்கள் சீருடைகளில் இடம்பெறும் இந்த செயலுக்கு பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.” என்று கூறியுள்ளார்.
மதுரா காவல்துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணன் உருவம் பொறிக்கப்பட்ட புதிய சீருடை மதுரா காவல்துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணன் உருவம் பொறிக்கப்பட்ட புதிய சீருடை Reviewed by நமதூர் செய்திகள் on 00:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.