வழிகாட்டுகிறது பீஹார்

இந்தியாவை அச்சுறுத்தும் மதவெறி சக்திகளுக்கு எதிராக பீஹாரில் லாலு பிரசாத்தும், நிதிஷ்குமாரும் கைகோர்த்திருப்பது இந்திய அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களோடு தேசிய அரசியல் சக்தியான காங்கிரஸ் கட்சியும் இணைந்திருப்பதுதான் ‘ஹைலைட்’ ஆகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அம்மாநிலத்தில் பாஜக அதிக இடங்களைப் பிடித்தது. இது சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை பேசும் கட்சிகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது.

எதிர்வரும் ஆகஸ்ட் 21 அன்று பீஹார் மாநிலத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது. இது மதச்சார்பற்றக் கட்சிகளின் அரசியல் எதிர்காலத்திற்கான பரிசோதனைக் களமாக அமைந்தது.

இத்தருணத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் பீஹார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார், தனது ஜென்மப் பகைவரான லாலு பிரசாத்துடன் கைகோர்க்கத் தயாரானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அரசியல் மாணவர்கள்; சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களால் அரசியலில் வளர்க்கப்பட்டவர்கள். ஜனதா தளம் பல கட்சிகளாக உடைந்தபோது, அதிகாரப் போட்டியில் இருவரும் பிரிந்தார்கள்.

இன்று பாஜக என்ற விஷப்பாம்பை விரட்டுவதற்காக தங்கள் ‘ஈகோ’வை கைவிட்டு இணைந்ததோடு, காங்கிரஸையும் அரவணைத்துக் கொண்டுள்ளார்கள். இதன்மூலம் மதச்சார்பின்மை வாக்குகள் சிதறக்கூடாது என்ற அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இது நாட்டுக்கு விடப்பட்டிருக்கும் நற்செய்தியாகும்.

10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகள் தலா நான்கும், காங்கிரஸ் கட்சி இரண்டும் என சுமூகமாக தொகுதி ஒப்பந்தம் நடைபெற்று பரப்புரைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

20 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்றைய தினம் ஹாஜிப்பூரில் லாலுவும், நிதீஷும் ஒரே மேடையில் தோன்றினர். இருவரும் கைகொடுத்து கட்டிப் பிடித்துக் கொண்டபோது, ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.

மதவெறி பிடித்த சில ஆங்கில ஊடகங்கள் வயிற்றெரிச்சலோடு இக்காட்சிகளை தவிர்க்க முடியாமல் ஒளிபரப்பின. நாடெங்கிலும் உள்ள சமூக நீதி ஆர்வலர்கள் உற்சாகத்தோடு அதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

நிதிஷ்குமார் பெருந்தன்மையோடு, இறுதியாகப் பேசும் வாய்ப்பை லாலுவுக்கு வழங்கினார். இக்கூட்டணி அமைய அதிகமாக பெருந்தன்மை காட்டிய நிதிஷ், தனது பேச்சில் பாஜகவைச் சாடினார். ‘அக்கட்சி கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், அக்கட்சி வகுப்புவாதத்தையும் கலவரத்தையும் தூண்டிவிடும்’ என எச்சரித்தார்.

லாலு பேசும்போது, நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. பாஜக தலைவர் அமித்ஷா, லாலுவின் மடியில் நிதிஷ்குமார் உட்கார்ந்திருக்கிறார் என்று கேலி செய்திருந்ததை தனது பேச்சில் குறிப்பிட்ட லாலு, ‘நிதிஷ் எனது தம்பி; எனவே மூத்த சகோதரரான என் மடியில் உட்காருவதற்கு தகுதியும், உரிமையும் அவருக்கு உண்டு’ என போட்டுத் தாக்கினார். கைத்தட்டல்கள் விண்ணைப் பிளந்தன.

மேலும், இதேபோல உ.பி.யில் முலாயமும், மாயாவதியும் கைகோர்க்க வேண்டும் என்றும் லாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

பீஹாரில் ஏற்பட்டுள்ள திருப்பம் நாடெங்கிலும் உள்ள மதச்சார்பற்ற & ஜனநாயக சக்திகளுக்கு புதிய நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது பீஹார் மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் செய்த தவறுகளை இப்போது திருத்திக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தங்கள் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அதற்கு பீஹார் வழிகாட்டியிருக்கிறது.

Thamimun Ansari
வழிகாட்டுகிறது பீஹார் வழிகாட்டுகிறது பீஹார் Reviewed by நமதூர் செய்திகள் on 03:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.