மதானியுடன் தமுமுக தலைவர்கள் சந்திப்பு!

ஜாமீனில் விடுதலையான கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியை தமுமுக தலைவர்கள் நேரில் சந்தித்தனர்.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணைக் கைதியாக நான்கு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட மதானி, நோய்களால் கடுமையாக அவதியுற்றார். கடுமையான நோயின் காரணமாக மதானிக்கு ஒரு மாத ஜாமீன் அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
முன்னதாக கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த மதானியின் ஜாமீன் மனுவை கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசும், ஆண்ட பாஜகவும் எதிர்த்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற நிபந்தனையின் அடிப்படையில் பெங்களூரில் சிகிச்சை பெற்றுவரும் மதானியை, கேரள முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூர் நேற்று இராமநாதபுரம் எம்.எல்.ஏவும், தமுமுக மூத்த தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், எஸ்.ஹைதர் அலி மற்றும் கோவை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மதானியுடன் தமுமுக தலைவர்கள் சந்திப்பு! மதானியுடன் தமுமுக தலைவர்கள் சந்திப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 03:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.