லவ் ஜிஹாத் அவதூறுப் பிரச்சாரத்திற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு!

லவ் ஜிஹாத் அவதூறுப் பிரச்சாரத்திற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு!
புதுடெல்லி: வகுப்புவெறியை தூண்டும் நோக்கில் சமூகத்தை பிளவுப்படுத்த சங்க்பரிவார அமைப்புகளும், சில கிறிஸ்தவ சபைகளும் நடத்தி வரும் லவ் ஜிஹாத் அவதூறு பிரச்சாரத்திற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.விருப்பமுடையவர்களை தங்களது வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள ஆணுக்கும்,பெண்ணுக்கும் உரிமை உண்டு என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் ஜகமதி சங்க்வான், என்.எஃப்.ஐ.டபிள்யூ தலைவர் ஆனி ராஜா, பிரபல வழக்கறிஞர் பிருந்தா க்ரோவர், சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தலைவராக இருக்கும் அன்ஹத் அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடுச் செய்திருந்தது.
பருவ வயதை அடைந்த யாரும் தமது விருப்பப்படி திருமணம் புரிய அனுமதி உண்டு என்று உச்சநீதிமன்றம் பல தடவை உத்தரவிட்டுள்ளது.இளைஞர் அல்லது இளம்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்த்தால் கூட கலப்பு திருமணம் புரியலாம்.இவ்வாறு திருமணம் முடிப்பவர்களுக்கு தொந்தரவு அளிப்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவுச் செய்வதற்கு சட்டத்தில் இடமுண்டு.பெண்களை கவர்ந்து செல்லும் நோக்குடன் முஸ்லிம் இளைஞர்கள் இந்து இளம் பெண்களை திருமணம் புரிவதாக இந்துத்துவாவினர் பரப்புரைச் செய்கின்றனர்.ஆனால், முஸ்லிம் பெண்களை இதர மதத்தவரும் திருமணம் புரிகின்றனர் என்பதுதான் உண்மை.
பாலிவுட் நடிகர் சுனில் தத் நர்கீஸையும், ஆதித்யா பாஞ்சோலி ஷெரீனா வஹாபையும், கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் பாத்திமாவையும், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஃபாரூக் அப்துல்லாவின் மகளையும், அரசியல்வாதி அருண் காவ்லி அயிசாவையும், சி.பி.எம் தலைவர் சீதாராம் யெச்சூரி சீமா சிஸ்தியையும், இலக்கியவாதி வி.எஸ்.நெய்போல் நாதியாவையும் திருமணம் புரிந்து வாழ்வது எல்லோருக்கும் தெரியும்.
வாக்குகளை குறிவைத்து பா.ஜ.கவும், சங்க்பரிவார அமைப்புகளும் கதைகளை ஜோடிக்கின்றன என்று வழக்கறிஞர் பிருந்தா க்ரோவர் குற்றம் சாட்டினார்.கலப்பு திருமணம் தொடர்பாக தகராறுகள் ஏற்படும்போது சமூகம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
முஸ்லிம்கள் இதர மதத்தவர்களை மதம் மாற்றவும், மக்கள் தொகையை அதிகரிக்கவும் திருமணம் முடிப்பதாக பரப்புரைச் செய்யப்படுகிறது.முஸ்லிம்களை தீயசக்திகளாக சித்தரிக்கும் நோக்குடன் குறுமதியாளர்கள் ’லவ் ஜிஹாத்’ என்ற வார்த்தையை பிரயோகிக்கின்றனர்.1920களிலும் இந்துத்துவாவினர் இத்தகைய பரப்புரையை கட்டவிழ்த்து விட்டனர்.கர்நாடகாவிலும், கேரளாவிலும் இப்பரப்புரை மீண்டும் துவக்கப்பட்டது.
இந்துப்பெண்கள், தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும்? என்பதை தீர்மானிக்க முடியாத ஒரு சூழல் உருவாகியுள்ளது.குஜராத், கண்டமால், முஸஃபர் நகர் உள்ளிட்ட பல்வேறு கலவரங்களிலும், இனப்படுகொலைகளிலும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பெண்களை கூட்டாக பாலியல் வன்புணர்வுச் செய்தவர்கள் தாம் இந்த பரப்புரையைச் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.லவ் ஜிஹாத் என்பது பொய் பரப்புரை மட்டுமே என்று கேரள, கர்நாடகா மாநில போலீசார் கண்டறிந்துள்ளனர் என்று பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடுச் செய்த அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
லவ் ஜிஹாத் அவதூறுப் பிரச்சாரத்திற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு! லவ் ஜிஹாத் அவதூறுப் பிரச்சாரத்திற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 23:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.