மணிப்பூர் மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவு!


இம்பால்: மணிப்பூரில் 13 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் மனித உரிமைப் போராளி இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய வேண்டும் என்று அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மணிப்பூரில் 2000ஆம் ஆண்டு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தின் கீழ் 10 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 13 ஆண்டுகாலம் உண்ணாநிலைப் போராட்டத்தை இரோம் ஷர்மிளா நடத்தி வருகிறார். அவரை போலீசார் கைது செய்வதும் பின்னர் வலுக்கட்டாயமாக உணவு கொடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இரோம் ஷர்மிளா மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது அரசு மருத்துவமனையில் மூக்கு வழியே உணவு செலுத்தப்பட்டு வருகிறது. அதுவே சிறைச்சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இரோம் ஷர்மிளா மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இரோம் ஷர்மிளா மீதான மாநில அரசின் தற்கொலை முயற்சி வழக்கை நீதிமன்றம் ரத்து செய்ததுடன் அவரை உடனே விடுதலை செய்யவும் உத்தரவிட்டது.
மணிப்பூர் மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவு! மணிப்பூர் மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவு! Reviewed by நமதூர் செய்திகள் on 06:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.