துருக்கியின் ஆளுங்கட்சி தலைவராக தாவூத் ஓக்லு தேர்வு!

துருக்கியின் புதிய பிரதமராக பதவியேற்கவிருக்கும் அஹ்மத் தாவூத் ஓக்லு, துருக்கியின் ஆளுங்கட்சியான ஏ.கே.கட்சியின் (ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் கட்சி) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2009-ஆம் ஆண்டு முதல் துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார் ஓக்லு. கட்சியின் உயர் மட்ட அவையில் 1382 உறுப்பினர்களின் வாக்குகள் அவருக்கு கிடைத்தன. 13 ஆண்டுகளாக எர்துகான் அலங்கரித்த ஏ.கே.கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது தலைவர் அஹ்மத் தாவூத் ஓக்லு ஆவார்.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஓக்லு கூறுகையில்; ‘2015-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் சாசனத்தை திருத்தி எழுத பாராளுமன்றத்துக்கு 330 உறுப்பினர்களை அனுப்பும் சக்திப்பெற்றது ஏ.கே.கட்சி.’ என்று தெரிவித்தார்.
தற்போது ஏ.கே.கட்சிக்கு பாராளுமன்றத்தில் 313 இடங்கள் உள்ளன.
துருக்கியின் ஆளுங்கட்சி தலைவராக தாவூத் ஓக்லு தேர்வு! துருக்கியின் ஆளுங்கட்சி தலைவராக தாவூத் ஓக்லு தேர்வு! Reviewed by நமதூர் செய்திகள் on 21:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.