காஸாவில் நீண்டகால போர் நிறுத்தம்: ஹமாஸின் கோரிக்கைகளை அங்கீகரித்தது இஸ்ரேல்! - வெற்றிக்களிப்பில் காஸா!


பல்வேறு தற்காலிக போர் நிறுத்தங்களை அறிவிப்பதும், தாக்குதல் தொடருவதுமான சூழ்நிலைகளின் இறுதியில் ஃபலஸ்தீன் காஸாவில் 50 நாட்களாக நீண்ட இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு ஓய்வு ஏற்ப்பட்டுள்ளது.
எகிப்தின் மத்தியஸ்தத்தில் ஹமாஸும், இஸ்ரேலும் நீண்டகால போர் நிறுத்தம் உடன்படிக்கையைச் செய்துகொண்டன.
காஸாவுக்கு எதிராக 2006-ஆம் ஆண்டு இஸ்ரேல் அறிவித்த தடையை நீக்கவேண்டும் என்ற ஹமாஸின் முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் அங்கீகரித்ததை தொடர்ந்து ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. இது எதிர்ப்புப் போராட்டத்தின் வெற்றி என்று ஹமாஸ் அரசியல் பிரிவு துணைத் தலைவர் மூஸா அபூ மர்ஸூக் தெரிவித்தார்.
காஸாவுக்கு நிவாரணப் பொருட்களும், கட்டிட கட்டுமானங்களுக்கு தேவையான பொருட்களும் கொண்டுவருவதற்கு தடை விலக்கப்படும் என்று இஸ்ரேல் அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஃபலஸ்தீன் போராளி இயக்கங்களை நிராயுதபாணிகளாக மாற்றவேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் அங்கீகரிக்கவில்லை. இதுத்தொடர்பாக ஒரு மாதத்திற்குள் எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் வெளிப்படையான பேச்சுவார்த்தை துவங்குவதற்கு உடன்பாடு ஏற்பட்டது.
போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு சற்று முன்பாக போராளிகளின் தாக்குதலில் ஏஷ்கோலில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது. இஸ்ரேல் தாக்குதலில் ஆறு ஃபலஸ்தீன் மக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து போராளிகள் கொடுத்த பதிலடியே இத்தாக்குதலாகும் என ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் முன்வைத்த பெரும்பாலான நிபந்தனைகளையும் இஸ்ரேல் அங்கீகரித்த பிறகே ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. காஸாவோடு ஒட்டிய இஸ்ரேல் மற்றும் எகிப்தின் எல்லைகள் திறக்கப்படும்.
முன்னர் காஸாவில் உள்ள மீன்பிடித் தொழிலாளர்களுக்கு மீன் பிடிப்பதற்கான பகுதியை நீட்டிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
காஸாவில் துறைமுகம் மற்றும் விமானநிலையம் கட்டுவதற்கான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் துவங்கும். காஸாவிற்கு ஆயுதங்களை கடத்தக் கூடாது என்ற இஸ்ரேலின் நிபந்தனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன் காஸா மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
2138 ஃபலஸ்தீன் மக்கள் ஏழு வாரங்களாக நீண்ட இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர். 70 இஸ்ரேலிய படை வீரர்கள் ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ராணுவத்தினரை தேடிப்பிடித்து போராளிகள் கொலைச் செய்வதே, நீண்ட கால போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. மொத்தத்தில் இந்த நீண்ட கால போர் ஒப்பந்தம் ஹமாஸ் போராளிகள் மற்றும் அங்குள்ள மக்களின் வெற்றியாகும்.
காஸாவில் நீண்டகால போர் நிறுத்தம்: ஹமாஸின் கோரிக்கைகளை அங்கீகரித்தது இஸ்ரேல்! - வெற்றிக்களிப்பில் காஸா! காஸாவில் நீண்டகால போர் நிறுத்தம்: ஹமாஸின் கோரிக்கைகளை அங்கீகரித்தது இஸ்ரேல்! - வெற்றிக்களிப்பில் காஸா! Reviewed by நமதூர் செய்திகள் on 02:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.