ஹமாஸ் வெற்றி பெற்றது எப்படி ...?


ஹமாஸ் வெற்றி பெற்றது எப்படி ...?
”பலஸ்தீன மக்களைப் பொருத்தவரைக்கும் , இந்த யுத்தம் பெரிய உயிரழப்பை உண்டு பண்ணியது உண்மைதான். ஆனால், பலஸ்தீனப் போராளிகளின் தளத்திலிருந்து நோக்கும் போது , இஸ்ரேலும் மிகக் கடுமையான இழப்புக்களை சந்தித்துள்ளது. ஈடுசெய்ய முடியாத பல அரசியல் மற்றும் இராஜதந்திர இழப்புக்களுக்கு இஸ்ரேல் முகங்கொடுத்துள்ளது. இத்தோல்விகள் அனைத்தும் கிட்டிய எதிர்காலத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தேசத்தின் உளவியலில் பெரிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் தெரிவிக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் , எத்தனை அப்பாவிகளை இஸ்ரேல் கொன்றொழித்தாலும் , இஸ்ரேல் இந்த யுத்தத்தில் தோல்வியடைந்து விட்டது என பல இஸ்ரேலிய ஆய்வாளர்களே எழுதுகின்றனர்.
ஹமாஸூக்கும் , இஸ்ரேலுக்குமிடையிலான யுத்ததில் இஸ்ரேலின் தோல்வியின் பரிமாணங்களை இக்கட்டுரை அடையாளமிட்டுக் காட்டுகின்றது.• சென்றவாரம் அமெரிக்காவின் ‘பொரின் அப்யாஸ்’ என்ற சஞ்சிகையில் ‘How Hamas won : Israelis tactical success and strategic failure‘ என்ற தலைப்பிலான கட்டுரையில் Areil llian Roth என்ற இஸ்ரேலிய இராஜதந்திரி ஒரு முக்கியமான அம்சத்தை சுட்டிக்காட்டுகிறார். அதாவது , இந்த யுத்தத்தில் ஹமாஸ் மூன்று கண்ணோட்டத்தில் வெற்றிபெற்றுவிட்டது. முதலாவது , டெல்அவீவ் மத்திய கிழக்கின் லண்டன் , பரீஸ் மற்றும் நியூயோர்க் என்ற மாயையை ஹமாஸ் உடைத்து விட்டது. ஏனென்றால், நெதன்யாகுவின் லிகுய்ட் கட்சியின் மிக பிரபல்யமான விளம்பரம் ‘பற்றியெரியும் மத்திய கிழக்கில் ஓரு இலண்டனாக டெல்அவீவ் காட்சியளிக்கிறது’ என்ற வாசகம் பரப்பட்டு வந்தன. இந்த யுத்தத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் ‘ஜஃபரி 75′ என்ற ஏவுகனையை டெல்அவீவின் இதயத்தினுல் செலுத்தியதுடன் , தலைநகரில் பல்லாயிரக் கணக்கான இஸ்ரேலியர்களை தொடர்ச்சியாக குண்டு பாதுகாப்பு அரணில் ( Bomb shelters ) தூங்க வைத்து விட்டனர். இந்த யுத்ததுடன் டெல்அவீவ் மத்திய கிழக்கின் இலண்டன் என்ற மாயை நீங்கி விட்டது.
இரண்டாவது ,
‘பலஸ்தீன தேசத்தின் ரொக்கட்கள் எங்களுக்கு ஆபத்தல்ல. அங்கு என்னதான் நடந்தாலும் , நாங்கள் எங்களின் வாழ்வை ஒட்டிச் செல்லலாம் என ஹய்பா நகர யூதர்கள் கருதி வந்தனர். ஆனால், இனிமேல் இஸ்ரேல்- ஹமாஸ் போர் ’தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸின் ரொக்கட்கள் தாக்கியது’ என்ற வாசகத்துடன் மட்டுப்படுத்தப்படும் செய்திக் குறிப்பாக இருக்க முடியாது. ஹமாஸின் இராணுவ பலம் ஹய்பா மக்களையும் ஒரு கணம் ஆட்டிவைத்தள்ளது. இந்த வகையிலும் ஹமாஸ் இந்தப் போராட்டத்தில் வெற்றியீட்டி விட்டது.
மூன்றாவது,
இஸ்ரேல் தேசம் நிம்மதியாக வாழ்வது ’வெறும் இலாபங்களை மாத்திரம் அள்ளித் தரும் வியாபாரமல்ல’ ( Cost- Free business ) என்ற இஸ்ரேலிய இராஜத்ந்திரகள் வட்டாரம் கணிப்பீடு செய்து விட்டன. ‘எமக்கு ஏதேனும் தேவைப்பட்டால் , அதனையடைவதற்கு இஸ்ரேலைத் தாக்கித்தான் பெற்றுக் கொள்வோம் ‘ என்ற சமன்பாட்டினை நோக்கி ஹமாஸ் பலஸ்தீனர்களை நகர்த்தி விட்டது. இனி ஓரளவுக்கு மேல் ‘பேச்சுவார்த்தை’ என்ற நஷ்டமற்ற வியாபாரம் செல்லுபடியாகது. இம்மூன்று பரிமாணங்களுக் கூடாவும் ஹமாஸ் இஸ்ரேலை வெற்றி கொண்டு விட்டது என்கிறார் Areil llian Roth .
எனவே , யுத்ததின் இறுதியில் இஸ்ரேல் சில நிலங்களை கைப்பற்றி விட்டு தங்களது வெற்றியை அறிவிக்கலாம். ஆனால் , இராஜதந்திர ரீதியில் பெரிய உளவியல் தோல்விகளை (Diplomatic and Physiological blow) டெல்அவீவ் சந்தித்துள்ளது என்கிறார் இஸ்ரேலிய இராஜதந்திரி.Areil llian Roth•
சமீபத்திய இஸ்ரேல் – ஹமாஸ் போராட்டத்தில் ஹமாஸின் வெற்றியை உறுதி செய்த விடயங்களில் மற்றொன்று என்னவென்றால், பென்கூறியன் விமான நிலையத்தின் மீதாக ஹமாஸின் ராக்கட் தாக்குதல்களினால் , பல சர்வதேச விமான சேவை நிலையங்கள் இஸ்ரேலுக்கான சேவையை இரத்து செய்தன. அமெரிக்கா முதல் இங்கிலாந்து , இத்தாலி , நெதர்லாந்து , போலந்து, ஜெர்மனி மற்றும் துருக்கி போன்ற நாடுகள் நேரடியாகவே பாதுகாப்பு காரணங்களைக் சுட்டிக் காட்டி விமான சேவையை நிறுத்தின. இதனால் , 65 000 மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய முடியாமல் விமான நிலையத்தில் முடங்கிக் கிடந்தனர்.உண்மையில், வேறொரு நாடாக இருக்கும் பட்சத்தில் , விமான சேவையை நிறுத்துவது என்பது சாதாரண விடயம்.ஆனால், இஸ்ரேலைப் பொறுத்தவரை , இவ்விமான சேவைகள் நிறுத்தமானது , அது அடைந்த பெரிய இராஜதந்திரத் தோல்வி என அரசியல் நோக்கர்கள் எழுதுகின்றனர். காரணம் , 1991 ஆம் ஆண்டு சதாம் ஹூசைன் இஸ்ரேலைத் தாக்கினார். இதன் போது பென்கூறியன் விமான நிலையம் மூடப்பட்டது. அதன் பிறகு முதல் முறையாக ஹமாஸின் ஏவுகனைகளே டெல்அவீவில் அமைந்துள்ள இஸ்ரேலின் பென்கூறியன் விமான நிலையத்தை தாக்கியுள்ளது. இஸ்ரேலில் ஒரு சாணளவும் நிலமும் பாதுகாப்பானதாக இல்லை என்ற முடிவுக்கு மறைமுகமாக சர்வதேச நாடுகள் வந்துள்ளதனையே, இவ்விமானச் சேவைகளது இரத்து சொல்லும் செய்தியாகும்.
ஹமாஸின் அரசியல் துறை பொறுப்பாளர் காலித் மிஷ்அல் ‘காஸாவை யூதர்கள் முற்றுகையிடுகின்றனர். நாங்கள் இஸ்ரேலின் வான்பரப்பை முற்றுகையிடுகிறோம்’ என குறிப்பிட்டார். அதேவேளை, ‘தங்களது விமான சேவைகளை நிறுத்துவதினூடாக ’ஹமாஸை’ சர்வதேசம் பலப்படுத்துகிறது ‘ என தனது அரசின் அதிருப்தியை இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமோன் பெரோஸ் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இன்னும் ‘பென்கூறியன் விமான நிலையத்தின் மீதான் தாக்குதல்களின் அரசியல் மற்றும் இராஜதந்திர பரிமாணம் பற்றிய ஆய்வாளர்களின் கருத்துக்கள் பல நாட்களாக சர்வதேச மீடியாக்களில் அலசப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.Bengurian airport•
இந்த யுத்ததில் ஹமாஸ் தோல்வியடையச் செய்ய முடியாது ஒரு ஆயுத சக்தி என்ற பிம்பம் இஸ்ரேலியர்களின் உளவியிலில் நிலையாகப் பதிந்து விட்டன. இதற்கு முன்னர் , ஏற்கனவே மேலே குறிப்பிட்டது போல , தெற்கு இஸ்ரேலியர்களே ஹமாஸ் – இஸ்ரேலியப் போரின் ஏற்ற – இறக்கங்களை அனுபவித்து வந்தவர்கள். இம்முறை முழு இஸ்ரேலியர்களையும் போருக்குல் தள்ளிவிட்டது ஹமாஸ். இதனால், பலர் உளவியல் ரீதியாகப் பாதிக்பட்டுள்ளதோடு , தங்களது குடியுரிமையை இரத்து செய்து விட்டு ஜரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அபாயம் நிலவுவதாக பலஸ்தீன-இஸ்ரேல் அரசியல் விற்பன்னர் கலாநிதி ஸாலிஹ் நுஃமானி குறிப்பிடுகிறார்.
டெல்அவீவில் பலர் ‘ எங்களது குழந்தைகளை ராக்கட் அபாய சமிஞ்சை சத்ததிற்கு மத்தியில் வளர்க்க இனியும் முடியாது’ என ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இனிவரும் ஹமாஸூடனான போர்கள் வடக்கு- தெற்கு என்ற பாகுபாடின்றி , அனைத்து இஸ்ரேலையும் மையப்படுத்தியதாகவே அமையப் போகிறது. இதனை இஸ்ரேலிய இராணுவமும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதனால் தான், நாட்டின் எல்லா பக்கங்களையும் ராக்கெட் தடுப்பு சாதனங்களை பொருத்தும் வேலைத்திட்டமொன்றை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு செயற்படுத்தி வருகின்றன.
மொத்ததில் ஹமாஸின் ஆளில்லா விமானங்கள் , கடற்படை மற்றும் நீண்ட தூர ராக்கட்கள் உட்பட, களத்தில் ஹமாஸின் வீரர்கள் காட்டும் ஆசகாய சாதனைகள் (இதுவரை 65 இஸ்ரேலியப் படை உயிரழந்துள்ளனர்) போன்றவை இஸ்ரேலியர்களுக்கு மத்தியில் ஹமாஸின் ஆயுதப் பலம் பற்றி இதுவரை இல்லாத ஒரு மனோநிலையை உருவாக்கியிருக்கிறது.
இறுதியாக , இந்த யுத்தம் இஸ்ரேலுக்கு மாத்திரம் தோல்வியல்ல. இஸ்ரேலின் வால் பிடிக்கும் ‘ அரபு ஸியோனிஸ்ட்டுகளுக்கும்’ தோல்விதான். நெதன்யாகுவின் யூத கடும்போக்கு ’லிக்குயிட் கட்சி’யின் பலஸ்தீனப் பிரதிநிதி என பட்டம்சூட்டி அலைக்கப்படும் மஃமூத் அப்பாஸூம் கூட ஹமாஸின் சாதனைகளையும் , அதன் யுத்த வெற்றிகளையும் மாத்திரமன்றி , அதனால் சர்வதேச உம்மத்தில் பொது நிலைப்பாடு ஹமாஸிற்கு சார்பாக திரும்புவதனையும் பார்த்து விட்டு ‘பலஸ்தீனர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை சமாதானம் இல்லை’ என போலிக் கோஷம் போடும் அளவுக்கு அரபுஸியோனிஸ்ட்கள் தோல்வியடைந்துள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ் ........

Puliangudi Seyad Ali
ஹமாஸ் வெற்றி பெற்றது எப்படி ...? ஹமாஸ் வெற்றி பெற்றது எப்படி ...? Reviewed by நமதூர் செய்திகள் on 00:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.