பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இலவச செல்போன் பழுது நீக்க பயிற்சி!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு செல்போன் பழுதுநீக்கம் குறித்து இலவசமாக 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் ஜனவரி 2ல் துவங்குகிறது.
இதுகுறித்து பெரம்பலூரில் இயங்கி வரும் ஐஓபி கிராமிய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜனவரி  2ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த இலவச பயிற்சி முகாமில் அதிநவீன செல்போன்களை பழுதுநீக்குவது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், 10ம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை வீதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமின் போது மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக் கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும்.

எனவே, இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர், ரெங்கா நகரில் உள்ள ஐஓபி கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு குடும்ப அட்டை, வாக்களர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04328-277869 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இலவச செல்போன் பழுது நீக்க பயிற்சி! பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இலவச செல்போன் பழுது நீக்க பயிற்சி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.