12 ஆண்டுகளாக நாங்கள் படும் வேதனை என்ன என்பதை எங்களுக்கு தெரியும்!மோடிக்கு தெரியாது!
அஹ்மதாபாத் : 2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை குறித்து தான் வருந்துவதாக தெரிவித்த நரேந்திரமோடிக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குஜராத் கலவரம் குறித்து இணையதள வலைப்பதிவில் எனக்கு ஏற்பட்ட மனவலியை எந்த வார்த்தைகளாலும் விவரிக்கமுடியாது. மனிதாபிமான மற்ற அந்த சம்பவத்தை “துயரம், சோகம், துன்பம், வலி,
வேதனை, கடும் துயரம், மரண வேதனை” என எந்த வார்த்தைகளால் குறிப்பிட்டாலும்மனத் துயரம் ஆறாது’ என்று மோடி கூறியிருந்தார்.
இதுக்குறித்து கருத்துதெரிவித்துள்ள பிரசாந்த் செண்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸின் ஃபாதர் ஸெடரிக்பிரகாஷ் கூறியதாவது: கலவரம் நடக்கும்போது மிக உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவர் என்ற நிலையில் சாதாரண மக்களின் சொத்துக்களுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டிய மோடி அதனைச் செய்யவில்லை என்று தெரிவித்தார்.பிரசாந்த் அமைப்பு 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாடுபடும் அமைப்பாகும்.
குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ரூபா கூறுகையில்,’மோடியின் வார்த்தைகளில் கூறினால் இது முதலைக் கண்ணீர்’ என்றுகுறிப்பிட்டார்.ரூபாவின் கதையின் அடிப்படையில் தான் பர்ஸானியா என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது.‘ஒரு கட்டத்தில் கூட மோடி தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்கவில்லை’என்று ரூபா கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில்,’12 வருடங்களாக வெளிப்படுத்தாத எந்த வேதனையை நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் அவர் வெளிப்படுத்துகிறார்? மோடிக்கு கல்இதயம். அதற்கு வேதனை ஏற்படாது. இப்போதும் சொந்த மகன் உயிரோடு இருக்கிறானா? என்பதை தெரியாத தாய் நான். 12 ஆண்டுகளாக எனக்கு தெரியும் எனது வேதனையை குறித்து.மோடிக்கு தெரியாது.குஜராத் கலவரம் நடக்கும்போது ரூபா, தனது மகனுடன் இஹ்ஸான் ஸாப்ரியின் வீட்டில் அடைக்கலம் தேடினார்.
அதற்கு பிறகு தனது மகனை ரூபா காணவில்லை.‘அன்று எல்லா மூத்த போலீஸ் அதிகாரிகளையும் அழைத்தோம்.எல்லோரும் கூறியவார்த்தை ஒன்றே.’இன்று நீங்கள் மரணிக்க வேண்டிய தினமாகும்.மேலிட உத்தரவே அதுதான்’ – ஹாத்தூன் ஆபா நினைவுக்கூறுகிறார்.
2002-ஆம் ஆண்டு நரோடா பாட்டியாவில் வாழ்ந்து வந்த இந்த 40 வயது பெண் மயிழையில் உயிர் தப்பினார்.கலவரத்தை நிறுத்து என்று மோடி அன்று கூறியிருந்தால் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கும்.ஆனால், அன்று மோடி அதனை கூறவில்லை.ஹாத்தூன் அந்த பயங்கர நாட்களை பயந்துக்கொண்டே சிரமத்துடன் நினைவுக் கூர்ந்தார்.
12 ஆண்டுகளாக நாங்கள் படும் வேதனை என்ன என்பதை எங்களுக்கு தெரியும்!மோடிக்கு தெரியாது!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:46:00
Rating:
No comments: